ரூ.2 கோடி காப்பீடு பணத்துக்காக கணவனை கொன்ற மனைவி!
கணவரின் 2 கோடி காப்பீடு பணத்துடன் காதலனுடன் உல்லாசமாக இருக்க கொலை செய்து மாரடைப்பாக நாடகமாடிய மனைவி கைது செய்யப்பட்டார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூர் மண்டலத்தில் உள்ள போர்கான் கிராமத்தைச் சேர்ந்த பல்லட்டி ரமேஷ் (35) ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது மனைவி சௌம்யா என்கிற அருணலதா ஒரு தனியார் பள்ளியில் எழுத்தராக பணிபுரிகிறார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், சௌம்யாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே பள்ளியில் விளையாட்டுத்துறை ஆசிரியராக பணியில் சேர்ந்த நந்திபேட்டை மண்டலம் பட்குனா கிராமத்தைச் சேர்ந்த நலேஸ்வரம் திலீப்புடன் திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு ஏற்பட்டது. இதனால் அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர். இது குறித்து ரமேஷ் அறிந்ததும் மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இதனால் சௌம்யா தனது காதலன் திலீப்பிடம் உறவுக்கு தடையாக இருக்கும் கணவரை கொலை செய்தால் அவர் மீது இருக்கும் காப்பீட்டு பணம் ரூ 2 கோடி வைத்து சந்தோஷமாக வாழலாம் எனக்கூறினார்.
இதனை கேட்ட தலீப் அவரது தம்பி மாதபூர் கிராமத்தைச் சேர்ந்த எரோல்லா அபிஷேக்கிடம் உதவி கோரினார். அவரும் ஏற்று கொண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி அபிஷேக் பைக்கில் சென்ற ரமேஷை தனது காரால் மோதிவிட்டு தப்பிச் சென்றார். இருப்பினும், விபத்தில் ரமேஷ் கையை உடைந்ததால் மக்லூர் போலீசில் அடையாளம் தெரியாத வாகன மோதியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் அபிஷேக் தனது நண்பர் ஜிதேந்தரை திலீப்பிற்கு அறிமுகப்படுத்தினார். ஜிதேந்தர் ரவுடி கும்பலுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கிசான் நகர் தண்டாவைச் சேர்ந்த கெலோத் ஸ்ரீராம் என்ற பப்லு, ராமாவத் ராகேஷ் மற்றும் துதேகுலா மோசின் ஆகியோருடன் ரூ. 35,000 தருவதாக கூறி சம்மதிக்க வைத்தனர்.
இதற்காக, சௌம்யா தனது தங்க மோதிரத்தை திலீப்பிடம் கொடுத்தார். அந்த மோந்திரத்தை பெற்ற தீலிப் அதை தனியார் அடகு கடையில் வைத்து பணத்தை கொண்டு ரவுடி கும்பலிடம் கொடுத்தார். பின்னர், டிசம்பர் 19 ஆம் தேதி இரவு, ரமேஷ் சாப்பிட்ட பிறகு, சௌம்யா கணவருக்கு தூக்க மாத்திரைகள் கலந்த தண்ணீரைக் குடிக்க வைத்தார் இதில் ரமேஷ் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றார். பின்னர் உடனடியாக தனது காதலனை போன் செய்து கூறினார். உடனடியாக தீலிப் ரவுடி கும்பலுக்கு போன் செய்தார். ஆனால் அவர்கள் போன் எடுக்கவில்லை. இதனால், அபிஷேக் மற்றும் திலீப் சௌம்யாவின் வீட்டிற்கு பைக்கில் சென்றனர். ரமேஷின் கழுத்தில் ஒரு துண்டைச் சுற்றி, முகத்தில் தலையணையை வைத்து மூச்சுத் திணறடித்து, அவர் மூச்சு விடமுடியாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் இறந்து விட்டதை உறுதி செய்து பைக்கில் புறப்பட்டனர். மறுநாள் காலையில், சௌம்யா தனது உறவினர்களுக்கு போன் செய்து, தனது கணவர் மாரடைப்பால் தூக்கத்தில் இறந்துவிட்டதாகக் கூறினார். அதே நாளில் அனைவரின் முன்னிலையிலும் இறுதிச் சடங்குகளைச் செய்தார். இந்தநிலையில் வேலைக்காக இஸ்ரேல் சென்றிருந்த ரமேஷ் தம்பி கோதாரிக்கு இறுதிச் சடங்கின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பினார். அந்த வீடியோ போட்டோக்களை பார்த்து தனது அண்ணன் கழுத்தில் காயங்கள் இருப்பதைக் கண்டு, சந்தேகமடைந்து போர்கான் கிராமத்தில் வசிக்கும் அவரது மனைவி அனுஷாவிடம் கூறி போலீசார் புகார் அளிக்க வைத்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். டிசம்பர் 24 அன்று, தாசில்தார் முன்னிலையில் இறந்த உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது, அதில் ரமேஷ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து செல்போன் சிக்னல் ஆதாரமாக சௌம்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதி சௌம்யா அவரது காதலன் திலீப், அபிஷேக் சேர்ந்து கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் மூவருடன் கொலைக்கு திட்டம் வகுத்த ரவுடி கும்பலை சேர்ந்த பந்து ஜிதேந்தர், கெலோத் ஸ்ரீராம் மற்றும் ராமாவத் ராகேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


