பாம்பை கடிக்கவிட்டு கணவனை கொலை செய்த மனைவி- பகீர் காரணம்
உத்திரப்பிரதேசத்தில் ரூ.20 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக பாம்பை கடிக்கவிட்டு கணவனை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் , கணவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் ஒரு பெண்ணும், அவருடன் காதலராகக் கூறப்படும் நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர் . கணவரின் மரணம் விபத்து போல் தோற்றமளிக்கச் செய்வதற்காக இருவரும் பாம்பைப் பயன்படுத்தியதாகவும், ரூ.20 லட்சம் காப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்கும், தங்களது உறவைத் தொடர்வதற்குமே அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹஸ்தினாபூரில் தனது மனைவி தாமினியுடன் இணைந்து கிருஷ்ணா கிட்ஸ் ப்ளே ஸ்கூலை நடத்தி வந்த அதுல் பன்வார், தனது படுக்கையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பன்வாரும் தாமினியும் 2019-ல் திருமணம் செய்து கொண்டு ஹஸ்தினாபூரில் வசித்து வந்ததனர். பள்ளியின் ஓட்டுநரான துஷார் என்ற நிக்கியுடன் தாமினிக்கு தொடர்பு இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் முதலில் ஒரு சாலை விபத்தை அரங்கேற்றி அதுலைக் கொல்ல முயன்றதாகவும், ஆனால் அந்தத் திட்டம் தோல்வியடைந்த பிறகு, அவர்கள் மற்றொரு சதித்திட்டத்தைத் தீட்டியதாகவும் காவல்துறை கூறுகிறது. தாமினி தன் கணவனைக் கொல்வதற்காகத் தன் காதலன் மற்றும் மேலும் இருவருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியிருக்கிறார். தாமினி தனது கணவரை மயக்கமடையச் செய்வதற்காக அவரது பாலில் தூக்க மாத்திரைகளைக் கலந்ததாகவும், பின்னர் படுக்கையில் ஒரு விஷப் பாம்பை விட்டதாகவும், அது அவரைக் கடித்ததாகவும் கூறப்படுகிறது. சந்தேகம் வராமல் இருப்பதற்காக, இந்த மரணத்தை இயற்கையான பாம்புக்கடி சம்பவமாக மாற்றியிருக்கிறார் தாமினி. கைபேசி அழைப்புப் பதிவுகள் மற்றும் பிற ஆதாரங்களை ஆய்வு செய்ததில், தாமினி மற்றும் துஷார் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டத்தை வெளிக்கொணர்ந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

