கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை எரித்து கொன்ற மனைவி

 
fire

புதுச்சேரியில் கள்ளக்காதல் மோகத்தில் கணவனை எரித்து கொன்ற மனைவியால், அவர்களது இரு பிள்ளைகளும் அனாதையாகி நிற்கின்றனர்.

கள்ளக்காதல்

புதுச்சேரி அடுத்த  மூலக்குளம் ஜே.ஜே.,நகரை சேர்ந்த பிரான்சிஸ். இவரது மனைவி மேரி(28).ஹோம் நர்சிங்.இவர்களுக்கு எட்டு வயதில் மகளும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். தம்பதி வழக்கம்போல் கடந்த 5ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில் அதிகாலையில் பிரான்சிஸ் உடல் முழுவதும் எரிந்த நிலையில் தீயில் உயிருக்கு போராடினார். மனைவியின் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து காப்பாற்றினர். தொடர்ந்து பிரான்ஸ்சியை மீட்டு அரசு பொதுமருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த சூழ்நிலையில் அவரிடம் ரெட்டியார்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது பிரான்சின்ஸ்,எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. நள்ளிரவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர் எண்ணை மீது பெட்ரோல் ஊற்றி எரித்தாக என்னுடைய மனைவி மேரி என்னிடம் தகவல் தெரிவித்தார் என்று கூறினார். இதையடுத்து பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். ஒருகட்டத்தில் போலீசாரின் சந்தேகம் மேரி மீது திரும்பியது. அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.

தொடர்ந்து அவரை ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதல் மோகத்தில் மேரியே தனது கணவர் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்து நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து அவரையும், அவரது கள்ளக்காதலன் கணேசனையும் போலீசார் கைது செய்தனர். ஹோம் நர்ஸ்சான மேரியும், அன்னை தெரசா நகரை சேர்ந்த வனிதாவும் நெருங்கிய தோழிகள். தோழியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தபோது அவரது கணவர் பிளம்பர் வேலை செய்யும் கணேசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கொலை
நாளடையில் இருவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. வனிதாவிற்கு தெரியாமல் இருவரும் பேசி வந்துள்ளனர். மேரி நள்ளிரவு நேரத்திலும், அதிகாலையில் மொபைபோனில் அடிக்கடி பேசுவதை பிரான்சிஸ் பார்த்துவிட்டார். அதை நேரடியாக மேரியிடம் கேட்டுள்ளார். அதற்கு வனிதாவிடம் பேசுவதாக கூறி,மழுப்பி வந்துள்ளார். கணவரிடம் நெருக்கம் இல்லாமல் கணேசனிடம் நெருக்கம் அதிகமான நிலையில், பிரான்சிஸ்சை என்ன செய்யலாம் என இருவரும்  யோசித்து வந்துள்ளனர். அதில் கள்ளகாதலுக்கு இடையூராக இருக்கும் பிரான்ஸ்சிஸ்-ஐ பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி 5-ம் தேதி கணேசன் பெட்ரோல் வாங்கி வந்து மேரியிடம்  கொடுத்துள்ளார்.

வழக்கம்போல் லோடு ஏற்றிய களைப்பில் போதையில் பிரான்சிஸ் வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளனர். பிரான்சிஸ் தூங்கியதை உறுதிப்படுத்தி கொண்ட மேரி, அவர் மீது பெட்ரோல்  தீ வைத்து விட்டு, தொலைவில் சென்று கொடூரமாக அமைதியாக இருந்துள்ளார். தீப்பற்றிய நிலையில் பிரான்சிஸ் அலறி துடித்ததும், சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அப்போது சுதாரித்த மேரி கணவரை அக்கம்பக்கத்தினருடன் காப்பாற்றுவதுபோல் நடித்துள்ளார். ஆனால் போலீஸ் விசாரணையின்போது தனது எதிரி யாரும் இல்லை என பிரான்ஸ்சிஸ் தெரிவித்ததால் மேரி வசமாக சிக்கியுள்ளார். கைது செய்யப்பட்ட மேரி, கள்ளக்காதலன் கணேசன் இருவரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.