"என்னடி !முதலிரவுக்கு வருவேன்னு பார்த்தா இங்க வந்திருக்கே"- மாப்பிள்ளைக்கு மணமகள் கொடுத்த அதிர்ச்சி

 
marriage

பல பெண்களை காதல் வலையில் வீழ்த்திய ஏமாற்றிய நபரை, பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் திருமணம் செய்துகொண்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

arrest

தமிழகத்தின் கும்பகோணத்தில் வசிக்கும் தியாகராஜன் என்ற வாலிபர் பல பெண்களை காதலித்து பின்னர் அவர்களை கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஜாலியாக இருந்து விட்டு பின்னர் அவர்களை கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வாழ்ந்து வந்துள்ளார் .
இந்நிலையில் அந்த ஊரை சேர்ந்த நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்த ஓர் இளம் பெண் ஒரு உறவினர் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார் .அந்த பெண்ணின் பெற்றோர் இல்லாததால் அவர் தனியாக வசித்து வந்தார் .இதையறிந்த அந்த தியாகராஜன்  வழக்கம்போல அந்த பெண்ணுக்கும் வலை வீசினார் .அப்போது அவரின் காதல் வலையில் அந்த பெண் விழுந்தார் .அவரை காதலிக்கும்போது  அந்த பெண் அந்த தியாகராஜனின் செல்போனை பார்த்த போது அதில் அவர் பல பெண்களுடன் ஜாலியாக இருக்கும் போட்டோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்தார் .அதுபற்றி அவரிடம் கேட்டதற்கு அவர் அந்த பெண்ணிடமிருந்து நழுவ ஆரம்பித்தார் .பின்னர் அந்த பெண் தன் உறவினர்கலிடம் சொல்லி அந்த தியாகராஜனை ஒரு கோவிலில் வைத்து கல்யாணம் செய்து கொண்டார் .பின்னர் அந்த பெண் கல்யாணம்  ஆனதும் மாலையும் கழுத்துமாக அங்குள்ள காவல் நிலையத்தில் தனது  புது கணவர் மீது புகார் கூரி போலீசில் ஒப்படைத்தார் .