"ஓவரா போன் பேசிய மனைவி பேச்சை ஒட்டுக்கேட்ட கணவன்" -அடுத்து நடந்த விபரீதம் .

 
cellphone


மனைவி அடிக்கடி போன் பேசியதால் கோவமான கணவன் அவரை தாக்கியதால் கைது செய்யப்பட்டார் .

Woman assaulted by husband in Ahmedabad [Representative image]
குஜராத்தின் அகமதாபாத்தின் பால்டி பகுதியைச் சேர்ந்த ஒரு 38 வயதான பெண் ,20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்து  கொண்டு இரண்டு குழந்தைகளுக்கு தாயானார்  .கடந்த 20 ஆண்டுகளாக நன்றாக போய் கொண்டிருந்த அவர்களின் வாழ்வில் செல்போன் மூலம் புயல் வீசியது .இதனால் அந்த கணவன் தன் மனைவி அடிக்கடி செல்போன் பேசுவதை பார்த்து கடுப்பானார் .அதனால் அவர் தான் இல்லத நேரத்தில் செல்போன் பேசக்கூடாது என்று கட்டளை போட்டார் .
அதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு வந்துள்ளது .இந்நிலையில்   அந்த மனைவி கணவர் வீட்டில் இல்லை என்று நினைத்து யாருடனோ மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார் .இதை அந்த கணவன் ஒரமாக நின்று ஒட்டுக்கேட்டார் .அதன் பிறகு  அந்த மனைவியிடம் தான் இல்லாத நேரத்தில் ஏன் போன் பேசுகிறாய் என்று கேட்டு அவரை  தாக்கி  விட்டு ,அவரை உடனே அவரின் தாயார் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்து விட்டார் .இதனால் அந்த பெண் தன் கண்வர் மீது போலீசில் புகார் தந்ததும்  ,போலீசார் வழக்கு பதிந்து அந்த கணவரை கைது  செய்தனர்