"அடிப்பாவி வேலை முடிஞ்சதும் கழட்டி விட்டுட்டுயே "-புது மாப்பிள்ளையை ஏமாத்திட்டு வெளிநாடு ஓடிப்போன மனைவி .

 
air india flight

கணவன் பணத்தில் வெளிநாடு போய் விட்டு அவரை கழட்டி விட்ட மனைவி மீது கணவன் போலீசில் புகார் கொடுத்துள்ளார் .

marriage
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவை சேர்ந்தவர் 25 வயதான சரணுக்கு கனடாவில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆனால் கனடா PR விசாவிற்கு விண்ணப்பிக்கத் தகுதிபெற தேவையான IELTS மதிப்பெண்களை அவரால் பெற முடியவில்லை.
இந்த நிலையில் திருமண தரகர் மூலம் லவ்ப்ரீத் என்ற பெண்ணின் வரன் சரணுக்கு வந்தது. அந்த பெண்ணுக்கு கனடா போக தேர்வு பெற்றாலும், செலவு செய்ய பணம் இல்லை .இந்நிலையில் அந்த சரண் அந்த பெண்ணை கனடாவுக்கு அனுப்புகிறேன் என்று கூறி கல்யாணம் செய்து கொண்டார் .அதனால் கடந்த 2018ம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் அந்த சரண் தன் மனைவியை  40 லட்சம் செலவு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார் .கனடா போன  அந்த மனைவி அவரின் கணவனை தொடர்பு கொள்ளாமலும் அவரை வெளிநாட்டுக்கு கூப்பிடாமலும் இருந்தார் .இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து சரண் போலீசில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .