அம்மா டிவி பார்த்தபோது அப்பாவுடன் சேர்ந்து 2 பேர் கழுத்தை நெரித்தார்கள்..சிறுமி அளித்த சாட்சியம் -தந்தைக்கு ஆயுள்

 
m

மகள் அளித்த  சாட்சியத்தின் அடிப்படையில் தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது நீதிமன்றம்.  தாயைக் கொன்ற வழக்கில் அந்த ஒன்பது வயது சிறுமி முக்கிய சாட்சியமாக இருந்து உள்ளார். 

 உத்திர பிரதேச மாநிலத்தில் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் இக்பால் அகமது. மருத்துவரான  இவருக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். ஜாபல்பூரில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

 இந்து மதத்தை சேர்ந்த நிஷா தேவி என்பவரை இப்பால் காதலித்திருக்கிறார்.  இதற்காக தன் மதத்தையும் தனக்கு திருமணமான விஷயங்களையும் மறைத்திருக்கிறார். தன் பெயர் ராஜூ சர்மா என்றும் நிஷாவிடம் கூறியிருக்கிறார்.  இதற்கிடையில் இவர்களின் திருமணம் இந்த முறைப்படி கடந்த 2012 ஆம் ஆண்டில் சகாரன்பூர் பகுதியில் நடந்துள்ளது

si

 இந்த திருமணத்தின் மூலம் நிசாவுக்கும் ராஜீவ் சர்மாவுக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர் .  ராஜூ சர்மா தன் இரண்டாவது மனைவி நிஷாவை சொந்த  தனது சொந்த ஊர் பரேலியில் உள்ள மீராகஞ்ச் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.  அப்போதுதான் நிஷாவுக்கு உண்மை தெரிய வந்திருக்கிறது.  ராஜூ சர்மா இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் என்றும்,  அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது.

 தன்னைப் பற்றிய விவரங்களை நிஷா தெரிந்து கொண்டதால் நிஷாவை இஸ்லாம் மதத்திற்கு மாறச்சொல்லி இக்பால் கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார்.  இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்திருக்கிறது. 

 இந்த நிலையில் தான் கடந்த 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி அன்று நிஷா தன் வீட்டில் உயிரிழந்த கிடந்து இருக்கிறார்.  நிஷாவின் மகள் அவரின் தாய் வழிபாட்டியிடம் இது குறித்து சொல்லியிருக்கிறார்.  சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதும் இப்பால் தலைமறைவாகி இருக்கிறார்.   நிஷாவின் தாய் அளித்த புகாரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தேடி வந்துள்ளனர்.

 நிஷாவின் பிரேத பரிசோதனை  அறிக்கையில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது.   இதன் பின்னர் போலீசாரின் தீவிர வேட்டையில் மூன்று மாதங்களுக்கு பின்னர் இக்பால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.   இது குறித்த வழக்கு பரேலி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  இந்த வழக்கின் விசாரணையின் போது நிஷாவின் 9 வயது மகள் அளித்த சாட்சியம் தான் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, இக்பாலுக்கு ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறது. 

 நீதிபதியின் முன்பு,  என் அம்மா வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போ ஒரு அப்பா இக்பால் வந்தார் . அவருடன் இன்னும் இரண்டு பேரும் சேர்ந்து வந்தார்கள். அவர்கள் எல்லாம் சேர்ந்து அம்மாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்கள் என்று சாட்சியம் அளிக்க,  இந்த சாட்சியத்தின் அடிப்படையில் இக்பாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது பரேலி நீதிமன்றம்.