நடுராத்திரியில சூடா டீ கேட்குதா? மாமியாரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற மருமகள்

 
a

தலைவலிக்கு சூடா டீ கேட்ட மாமியாருக்கு ஆறிப்போன டீ கொடுத்திருக்கிறார் மருமகள்.  இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து மாமியாரை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்திருக்கிறார் மருமகள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்குடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேலு . இவரின் மனைவி பழனியம்மாள்(75).  இத்தம்பதிக்கு மூன்று மகள்கள் ஒரு மகன்.    பழனியம்மாள் மகன் சுப்ரமணிக்கு திருமணமாகி கனகு என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். வேலு இறந்து விட்டதால் மகன் சுப்பிரமணியனுடனேயே வாழ்ந்து வந்திருக்கிறார் பழனி அம்மாள். 

 சுப்பிரமணி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.   நேற்று கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு சுப்பிரமணி வீடு திரும்பியதும் சுப்பிரமணி ,அவரது மகன் , மனைவி, தாயார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து  இரவு சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறார்கள்.   பின்னர் அனைவரும் தூங்கி இருக்கிறார்கள். பனியின் தாக்கத்தினால் மூதாட்டி பழனியம்மாளுக்கு தலைவலி ஏற்பட்டிருக்கிறது.  

mu

 இதனால் தூங்கிக் கொண்டிருந்த மருமகள் கனவனை எழுப்பி  சூடா ஒரு டீ போட்டு தருமாறு கேட்டு இருக்கிறார்.   தூக்கத்தில் இருந்த கனகுவும்  டீ போட்டு கொடுத்திருக்கிறார்.  அந்த டீ ஆறி போய் இருந்திருக்கிறது. 

 தலைவலிக்கு சூடாகத்தானே கேட்டேன். இப்படி ஆறிப் போய் கொடுக்கிறீயே என்று பழனியம்மாள் ஆத்திரப்பட,  நடுராத்திரியில் உனக்கு சூடா டீ கேக்குதா என்று மருமகள் கனகு ஆவேசப்பட்டிருக்கிறார் .  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.  இந்த வாக்குவாதத்தில் இரும்பு கம்பியை எடுத்து மாமியார் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார் .  இதில் தலை மற்றும் முகத்தில் படுகாயம் பட்டு  அலறி துடித்து இருக்கிறார் . 

பழனியம்மாள் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள்.  மகன் சுப்பரசுப்ரமணியம் தூக்கம் கலைந்து எழுந்து பதறி இருக்கிறார்.  உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பழனியம்மாளை அனைவரும் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் .  அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்திருக்கிறார் பழனியம்மாள்.

 இது குறித்து தகவல் அறிந்ததும் இலுப்பூர் போலீசால் பழனியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு,  கொலை வழக்கு பதிவு செய்து கனகுவை கைது செய்துள்ளனர்.