திருமணம் செய்யக்கூறியதால் ஆசிரியை கொலை

 
திருமணம் செய்யக்கூறியதால் ஆசிரியை கொலை 

உத்தரப் பிரதேசம் தேவாரியாவில் திருமணம் செய்ய வற்புறுத்திய ஆசிரியையை கொலை செய்த பள்ளி  மேலாளர் விஜய் நிஷாத் கைது செய்யப்பட்டார். 

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 2018 முதல் பணியாற்றி வந்த 27 வயதான ஆசிரியை, அப்பள்ளியின் முதல்வரால் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராணி விஸ்வகர்மா, தான் ஆசிரியராகப் பணிபுரியும் கோரக்பூர் பள்ளிக்குச் சம்பளம் வாங்கச் செல்வதாகத் தன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அன்றைய தினம் பிற்பகலில், 15 கி.மீ தொலைவில் உள்ள தியோரியாவின் ருத்ராபூர் பகுதியில் சாலையோரத்தில் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதலில் அவரை அடையாளம் காண முடியவில்லை. போலீசார் அவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும், அதன்பின் அவர் கோரக்பூரின் ஜங்கா பகுதியைச் சேர்ந்த ராணி என அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

காவல்துறை அவளது குடும்பத்தினரைத் தொடர்புகொண்டபோது, ​​அவள் பள்ளிக்குச் சென்றதாகவும், வீடு திரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர். விசாரணையின் போது, ​​திருமணமானவரான பள்ளி  மேலாளர் நிஷாத், ராணியுடன் கள்ளக்காதலில் இருந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு ஆசிரியை வற்புறுத்தியதால் கொலை செய்ததாக பள்ளி  மேலாளர் விஜய் நிஷாத் வாக்குமூலம் அளித்துள்ளார். 
பகல் முழுவதும் சடலத்தை காரின் டிக்கியில் மறைத்து வைத்து ஊர் சுற்றிய பள்ளி மேலாளர், இரவு உடலை புதரில் வீசி சென்றுள்ளார்