மணப்பெண் அறைக்குள் துப்பாக்கிச்சத்தம்! ஒருதலைக்காதல் பயங்கரம்!

 
க்

மணப்பெண் அறைக்குள் திடீரென்று துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது.  ஒருதலை காதலால் இந்த பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது.

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில் முபாரிக்பூர் கிராமம்.  இக்கிராமத்தை சேர்ந்த காஜல் என்பவர் என்பவரை ஒரு தலையாக காதலித்து வந்திருக்கிறார் அந்த நபர்.   நீண்டகாலமாக அப்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்திருக்கிறார்.  கடைசி வரை அவரது காதலை அந்த பெண் ஏற்றுக் கொள்ளவே இல்லை.

க

இந்த நிலையில் பெற்றோர்கள் அப்பெண்ணிற்கு வேறு இடத்தில் வரன் பேசி திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.    இதைத் தெரிந்து அந்த ஆண் நபர் மிகவும் ஆத்திரமடைந்து இருக்கிறார்.   தன் காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாரே என்று கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இதனால் தனக்கு கிடைக்காத அந்தப்பெண் யாருக்கும் கிடைக்க கூடாது என்று நினைத்திருக்கிறார்.

 திருமணத்தின் முக்கிய நிகழ்வான மாலை மாற்றும் சடங்கு நடந்திருக்கிறது.   அதன்பின்னர் ஆடை மாற்றி அலங்காரம் செய்வதற்காக மணப்பெண்,  அறைக்குள் சென்று இருக்கிறார்.   அப்போது மணப்பெண் அறைக்குள்  இளைஞர் ஒருவர் திடுதிப்பென்று உள்ளே புகுந்து இருக்கிறார்.   அவர் உள்ளே புகுந்த சிறிது நேரத்திலேயே துப்பாக்கி சத்தம் கேட்டிருக்கிறது.

 துப்பாக்கிச் சத்தத்தை கேட்டு அனைவரும் பதறி போய் இருக்கிறார்கள்.   துப்பாக்கி சத்தம் கேட்ட அடுத்த நிமிஷமே அறையிலிருந்து இளைஞர் ஒருவர் வேக வேகமாக தப்பி ஓடியிருக்கிறார்.   உடனே எல்லோரும் அருகில் சென்று பார்த்தபோது அங்கு துப்பாக்கியால் சுடப்பட்டு கிடந்திருக்கிறார் மணப்பெண்.  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து கிடந்திருக்கிறார்.   இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 போலீசார் விரைந்து வந்து காஜல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அதன்பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஒருதலை காதலால் இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்தது .  இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.