"க்யூவில் நின்று கெடுத்த கொடூரர்கள்" -ரஷ்ய வீரர்களின் கர்ப்பத்தை சுமக்கும் உக்ரைன் சிறுமிகளின் அவலம்

 
gang

உக்ரேனில் ரஷ்ய வீரர்கள் ஐவரால் வன்கொடுமைக்கு இலக்காகி இப்போது கர்ப்பமாகி இருக்கும்   14 வயது சிறுமியின் பரிதாப நிலை பலரை கலங்க வைத்துள்ளது 


ரஷ்ய வீரர்களால் பிடித்து வரப்பட்டு ,அவரை வரிசை கட்டி நின்று  சின்னாபின்னமாக்கப்பட்ட புச்சா பகுதியை சேர்ந்த 14 வயதான  சிறுமி, இப்போது கர்ப்பமாகி ,பிறக்க போகும் குழந்தைக்கு தந்தை யாரென்று தெரியாமல் இருக்கும் கொடுமை நடந்துள்ளது .இப்போது அந்த சிறுமி இந்த கருவை கலைத்து விட்டால் மீண்டும் கரு உருவாகாது என்று பயப்படுவதால் அவர் கருக்கலைப்பு முடிவை கைவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது 
உளவியல் ஆலோசகரான ஒலெக்ஸாண்ட்ரா க்விக்கோ  அந்த சிறுமியின் பரிதாப நிலை பற்றி  தகவல் வெளியிட்டுள்ளார். மேலும், குழந்தையை ஏற்கும் பொருட்டு, சிறுமியுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ரஷிய வீரர்களின் வன்கொடுமைக்கு இலக்காகி கர்ப்பமடைந்துள்ள 14 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 5 சிறுமிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.