"மப்பு ஏத்தி விட்டுட்டு ,தப்பு தப்பா நடந்துக்கிறாங்களே.." -நர்சிங் மாணவிகளுக்கு நடந்த கொடுமை

 
man cheating and rape a women by marriage

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெண் உள்ளிட்ட இருவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

gang rape

தமிழகத்தின் கடலுார் மாவட்டம், பண்ருட்டியில் தனியார் நர்சிங்  பயிற்சி பள்ளியை, கடலுாரை சேர்ந்த டேவிட் என்பவர் நடத்தி வருகிறார். அங்கு பயிற்சி எடுக்கும் மூன்று மாணவிகளுக்கு   பயிற்சி ஆசிரியர் அன்பழகன், பிரேம் உள்ளிட்ட 4 பேர் ஆசை வலை விரித்தனர் .இதற்காக நிஷா என்ற ஒரு பெண் மூலம் அவர்களை  திட்டமிட்டு 'கேம்ப்' என கூறி ஏற்காடு அழைத்து சென்றனர்.

அதன் பிறகு அந்த நிஷாவின் பேச்சை நம்பி சென்ற அந்த மூன்று மாணவிகளையும் கடந்த டிசம்பர் 4ம் தேதி ஏற்காட்டில் ரூம் எடுத்து தங்க வைத்தனர் . பிறகு அவர்களுக்கு அந்த நிஷா என்ற பெண் மூலம் மது வழங்கி அவர்களை மயங்க செய்தனர் .பிறகு மாணவிகள் மதுபோதையில் மயங்கி இருக்கும்போது அந்த வாலிபர்கள் பாலியல் சீண்டல் செய்துள்ளனர். 
இந்நிலையில், இந்த நர்சிங் கல்லுாரியில் மீண்டும் கடந்த 2ம் தேதி 'கேம்ப்' செல்வதாக கூறி அழைத்தனர். அப்போது அந்த மாணவிகள் தங்களுக்கு சென்ற முறை நடந்த கொடுமையை தங்களின் பெற்றோரிடம் கூறியதும் ,அந்த மாணவிகளின் பெற்றோர் இதை கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 12ம் தேதி செவிலியர் மாணவி ஒருவர் மேம்பாலத்தில் இருந்து குதித்தார். பலத்த காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஒரு மாணவி கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிந்து நிஷா, அன்பழகன் ஆகியோரை கைது செய்து ,மேலும்  டேவிட், பிரேம் ஆகியோரை தேடி வருகின்றனர்.