முதலில் பெண்கள் நோட்டம்… அடுத்து செயின் பறிப்பு… காதலிகளுக்கு பங்கு!- சென்னையில் வெள்ளிக்கிழமை திருடர்களின் அட்ராசிட்டி

 

முதலில் பெண்கள் நோட்டம்… அடுத்து செயின் பறிப்பு… காதலிகளுக்கு பங்கு!- சென்னையில் வெள்ளிக்கிழமை திருடர்களின் அட்ராசிட்டி

சென்னையில் வெள்ளிக்கிழமை தோறும் பெண்களை குறித்து வைத்து செயின்களை பறித்து வந்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முதலில் பெண்கள் நோட்டம்… அடுத்து செயின் பறிப்பு… காதலிகளுக்கு பங்கு!- சென்னையில் வெள்ளிக்கிழமை திருடர்களின் அட்ராசிட்டி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட எல்லைப்பகுதிகளில் தொடர்ந்து செயின், செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதனிடையே, சென்னை கொரட்டூர் காவல் நிலையத்தில் செயின் பறிப்பு தொடர்பாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் “தான் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு சென்றுவிட்டு வரும்போது பைக்கில் வந்த 2 இளைஞர்கள் என்னுடைய செயினை பறித்துவிட்டு சென்றுவிட்டனர். அந்த கொள்ளையர்களிடம் இருந்து எனது செயினை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த புகாரையடுத்து, அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன், கொரட்டூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமைக் காவலர்கள் பலராமன், பீட்டர் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை காவலர்கள், சம்பவம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, செயின் பறிப்பு கொள்ளையர்கள், கொள்ளையடிக்கும் போது வெள்ளை நிற பைக்கிலும் சிறிது நேரத்தில் அந்தப் பைக் நீல நிறத்துக்கு மாறிய தகவல்களை சிசிடிவி காட்சிகளை வைத்து கண்டுபிடித்தனர்.

முதலில் பெண்கள் நோட்டம்… அடுத்து செயின் பறிப்பு… காதலிகளுக்கு பங்கு!- சென்னையில் வெள்ளிக்கிழமை திருடர்களின் அட்ராசிட்டி

இதனிடையே, கொரட்டூர் இன்ஸ்பெக்டர் பொற்கொடி வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளார். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து, இரண்டு பேரையும் காவல்நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் பொற்கொடி, தனது பாணியில் விசாரணை மேற்கொண்டார். அப்போது, இருவரும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருவதை ஒப்புக் கொண்டனர். இந்த கொள்ளையர்களின் பெயர் பாலு என்கிற பூபாலன் (21), பாபு (20) எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 10 சவரன் தங்கச் செயின்கள், 3 விலை உயர்ந்த திருட்டு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறையில் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

பூபாலன் மெக்கானிக் வேலையும், பாபு பெயிண்டிங் வேலையும் செய்துவருகிறார். பூபாலன் பைக்குகளைத் திருடி செயின் பறிப்பு சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார். பாபு, பெயிண்டர் என்பதால் சிசிடிவி கேமரா மூலம் தங்களைக் கண்டுபிடித்துவிடக்கூடாது என்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன் ஸ்பீரே மூலம் பைக்கின் கலரை மாற்றிவிடுவாராம். இதற்காகவே பெயிண்ட் ஸ்பீரே வாங்கி வைத்துள்ளார் பாபு. செயின் பறிப்பில் ஈடுபட்டபிறகு பைக்கின் கலரை பெட்ரோல் மூலம் கலரை மாற்றிவிடுவாராம் பாபு. இதனால் சிசிடிவி மூலம் இவர்களை கண்டறிவதில் காவலர்களுக்கு சிக்கல் நீடித்து வந்துள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட டீ சர்ட் மற்றும் சட்டையை அணிந்துச் செல்வார்களாம். செயின் பறிப்பில் ஈடுபட்டபிறகு சட்டையை கழற்றிவிட்டு டீ சர்ட்டுடன் பைக்கில் செல்வார்களாம். இது காவலர்களின் பிடியிலிருந்து தப்பிக்க இருவரும் செய்துவந்த தந்திரங்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் பெண்கள் நோட்டம்… அடுத்து செயின் பறிப்பு… காதலிகளுக்கு பங்கு!- சென்னையில் வெள்ளிக்கிழமை திருடர்களின் அட்ராசிட்டி

பெண்களிடம் இருந்து பறிக்கும் அறுந்த செயின்களை ஊரடங்கு நேரம் என்பதால் ஆன்லைன் மூலம் விற்றுவந்துள்ளனர். இந்த பணத்தை பூபாலன் அயனாவரம், வில்லிவாக்கத்தில் உள்ள காதலிகளிடம் கொடுத்து வந்துள்ளார். இந்த பணத்தை வைத்து மார்க்கெட்டில் கடை நடத்திவந்துள்ளார். இவர் மீதும் திருமங்களம், அண்ணாநகர் காவல் நிலையங்களில் செல்போன் பறிப்பு வழக்குகள் உள்ளன. இவர்களிடம் இருந்து 40 செல்போன்கள் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர், சோழவரம், மீஞ்சூர், வில்லிவாக்கம், ராஜமங்களம், அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருமுல்லைவாயல், புழல் ஆகிய பகுதிகளில் திருடிய பகுதிகளை கூறியுள்ளனர். திருட்டு பைக்குகளில் வலம் வரும் இருவரும், கொள்ளையடிப்பதற்கு முன் முதலில் அந்த இடத்தை நோட்டமிடுவார்களாம். பின்னர் வெள்ளிக்கிழமை கோயில்களுக்குச் செல்லும் பெண்களை பின்தொடர்ந்து இவர்கள் கொள்ளையடிப்பார்களாம். வெள்ளிக்கிழமை கொள்ளையர்களான இவர்களிடம் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.