கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர்

 
ச்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் கர்ப்பிணி பெண் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை அளித்த தவெக பிரமுகர் யோகேஸ்வரனை அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக தாக்கி காவல்துறையில் ஒப்படைத்தனர். பெண்கள் தாக்கும் போது மன்னித்து விடுங்கள் என யோகேஸ்வரன் கெஞ்சியுள்ளார். யோகேஸ்வரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.