தகாத உறவால் நேர்ந்த விபரீதம்- இளைஞர் அடித்துக்கொலை

 
murder

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வைப்பனை கிராமத்தை சேர்ந்த சேகரின் மகன் குணா (25). சேகர் திருமணமாகாதவர். இவர் மதுராந்தகத்தில் இயங்கி வரும் கிராம சக்தி பைனான்ஸ் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

Chengalpattu Husband Was Arrested For Beating His Wife To Death On  Suspicion Near Madhurandakam | காதல் மனைவி மீது சந்தேகம்.. கொலை  செய்துவிட்டு நாடகமாடிய கணவன்: சிக்கியது எப்படி?

இவர் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவி குழுவிற்கு வழங்கப்படும் கடன் வசூல் செய்யும் வேலை செய்து வருவதால், சூனாம்பேடு பகுதியில் மகளிர் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் வசூல் செய்து வருகிறார். வேலைக்கு சென்ற இடத்தில் சோபனா என்ற பெண்ணுடன் பழக்கம் உண்டாகி தகாத உறவு ஏற்பட்டுள்ளது. சோபனா திருமணமானவர் ஆவார். இதை அவரது தம்பி பாவலன் கண்டித்து உள்ளார். ஆனால் இவர்கள் உறவு நீடித்ததால் பாவலன் தனது நண்பர்கள் மூலம் குணாவை பழிவாங்க நினைத்து நேற்றைய முன் தினம், வெள்ளிக்கிழமை வேலையில் இருந்த குணாவை மதுராந்தகம் பகுதியை சேர்ந்த சில நபர்கள் தங்களிடம் லோன் வாங்க வேண்டும் என அழைத்து அவரைக் கடத்திச் சென்று சரமாறியாக தாக்கியுள்ளனர்.

இதில் குணா நிலை தடுமாற, அவரது போனை எடுத்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் 108 அவசரம் ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து, அவர் விபத்தில் காயம் அடைந்து கிடப்பதாக கூறிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட குணா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குணா மீது தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினார். 

காலால் எட்டி உதைத்து 6 மாத குழந்தை கொலை - Dinakaran

இதனிடையே குணா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் முக்கிய குற்றவாளிகளான மதுராந்தகம் பகுதியில் சேர்ந்த மோகன், வெற்றிவேல், சந்தோஷ், சேகர், செல்வகுமார், பரத், டோல்க் ஆகிய ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக நான்கு பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை மதுராந்தகம் காவல்துறையினர் வலை வீசிதேடி வருகின்றனர்