தோட்டத்தில் SI மகள் புதைப்பு..! பார்க்க கூடாததை பார்த்து வெறிச்செயல்.. உயிரை பறித்த பக்கத்துவீட்டு தோழி!
தூத்துக்குடியில் கணவருடன் கள்ளத்தொடர்பில் இருந்த பிருந்தா தேவி என்ற பெண்ணை தாக்கி தலையனாயால் அழுத்தி கொடூரமாக கொலை செய்து ஊருக்கு ஒதுக்குப்புறமாக புதைத்த மாரிமுத்து - சரவண பிரியா தம்பதி கைது செய்யபட்டனர்.

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் கிருஷ்ணகுமார்- பிருந்தா தேவி , தம்பதியினர் வசித்து வருகின்றனர். கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டு அருகே சரவண பிரியா - மாரிமுத்து என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். 49 ஆம் நம்பர் வீட்டில் சரவண பிரியா தம்பதியும் 50-ம் நம்பர் வீட்டில் பிருந்தா தேவியும் குடியிருந்து வந்துள்ளனர். கணவர் வெளிநாட்டில் இருப்பதை பயன்படுத்தி மாரிமுத்து பிருந்தா தேவியுடன் நெருங்கி பழகியுள்ளார். நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறி அடிக்கடி பிருந்தா தேவி வீட்டிற்கு சென்று தனது மனைவி சரவண பிரியாவுக்கு தெரியாமல் உல்லாசமாக இருப்பது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. ஒரு சில நேரங்களில் சரவண பிரியா வீட்டில் இல்லாத நேரத்தில் மாரிமுத்து அவரது வீட்டிற்கு அழைத்து வந்து பிருந்தா தேவியுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12-ம் தேதி காலை சரவண பிரியா வீட்டில் இருந்து வெளியே சென்ற நேரத்தை பயன்படுத்தி பிருந்தா தேவியை மாரிமுத்து வீட்டிற்கு அழைத்து தனிமையில் இருந்துள்ளனர்.
இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சரவண பிரியா ஏதோ காரணத்திற்காக உடனடியாக வீட்டிற்கு வந்து விட இருவரும் தனிமையில் இருப்பதை பார்த்ததும் பிருந்தா தேவிக்கும் சரவண பிரியாவிற்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது சரவண பிரியா பிருந்தா தேவியை அடித்து கீழே தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. அதில் தலையில் காயம் ஏற்பட்ட பிருந்தா தேவி மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து பிருந்தா தேவி உயிருடன் இருந்தால் தனது கணவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பார். எனவே அவரை கொன்று விட வேண்டும் என்று நினைத்த சரவணன் பிரியா பிருந்தா தேவியை தலையணையை வைத்து முகத்தில் அழுத்தி கொடூரமாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர். பின்னர் பிருந்தா தேவியின் உடலை சரவண பிரியாவும் மாரிமுத்துவும் மதியம் வரை வீட்டிலேயே வைத்துவிட்டு ஆள் நடமாட்டம் குறைந்த பிறகு சாக்கு முட்டையில் கட்டி இருவரும் இணைந்து இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் தூக்கிச் சென்று தூத்துக்குடிக்கு வெளியே உள்ள காட்டுப் பகுதியில் குழி தோண்டி புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல் சரவண பிரியாபு அவரது கணவன் மாரிமுத்துவும் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் பிருந்தா தேவியை காணவில்லை என அவரது தந்தை முன்னாள் உதவி ஆய்வாளர் (ஓய்வு பெற்ற) செல்லதுரை சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தில் விசாரணை செய்யும் போது இறந்த பிருந்தா தேவி அடிக்கடி சரவணன் பிரியா மாரிமுத்து தம்பதியிடம் பேசுவதை அறிந்த காவல்துறையினர் இருவரிடமும் விசாரணையை மேற்கொண்டனர். இதில் கணவரும் மனைவியும் முன்னுக்குப் பின் முரணான தகவலை கூறியதை தொடர்ந்து சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் மாரிமுத்து விற்கும் பிருந்தா தேவிக்கும் இருந்த கள்ளத்தொடர்பால் பிருந்தா தேவியை அடித்து தலையணையால் முகத்தில் அழுத்தி கொடூரமாக கொலை செய்து காட்டுப் பகுதியில் புதைத்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். தற்போது எங்கே புதைத்தார்கள் என அவர்களிடம் கேட்டு இடத்தை கண்டறிந்த பிறகு நாளை கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் உடலை தோண்டி எடுக்க இருக்கிறார்கள். தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மகளை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தாக்கி தலையணையால் அழுத்தி கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

