"ஆட்டைய போட போன வீட்டில் கேட்டை பூட்டிட்டு ..."ஒரு திருடன் செஞ்ச வேலைய பாருங்க.

 
food

திருடச் சென்ற வீட்டிற்குள் ஆள் இல்லாததால் வீட்டை பூட்டிவிட்டு சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த திருடனை போலீசார் பிடித்தனர் 

atm theft
அஸ்ஸாமின்  கவுஹாத்தியின் ஹெங்கராபரி என்ற பகுதியில்,  உள்ள ஒரு வீட்டில் உள்ள அனைவரும் வெளியூர் போய் விட்டனர் .இதையறிந்து கொண்ட ஒரு திருடன் ,நேற்று முன்தினம் இரவு, வீட்டில் உரிமையாளர்கள் இல்லாததால் , அந்த வீட்டிற்குள் நுழைந்து உள்ளான்.அப்போது அந்த வீட்டில் திருடிக்கொண்டிருந்த அவனுக்கு பசி எடுக்கவே, திருடுவதை விட்டு விட்டு, சமையலறைக்கு சென்றுள்ளான்.

அங்கு உணவு ஏதும் இல்லாததால், கிச்சனில் உள்ள சமையல் பொருளை கொண்டு ,தனக்கு பிடித்தமான கிச்சடியை சமைத்து சாப்பிட்டு உள்ளான். பூட்டிய வீட்டுக்குள் லைட் எரிவதையும் ,ஆள் நடமாட்டம் இருப்பதையும்  பார்த்து சந்தேகித்த அக்கம் பக்கத்தினர், திருடனை மடக்கிப் பிடித்தனர். பிறகு போலீசாரிடமும் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்த திருடனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

பின், சிறையில் அடைக்கப்பட்ட அவனுக்கு, போலீசார் உணவு வாங்கிக் கொடுத்தனர்.திருட வந்தவன் கிச்சடி சமைத்து சிக்கிய சம்பவம், மிகவும் வேடிக்கையாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.