சிறுநீரை பிடித்து முகத்தில் வீசுகிறார்கள் - கதறும் பாதுகாவலர்கள்

 
ச்

ஒருமையில் பேசுகிறார்கள்.  சிறுநீரைப் பிடித்து முகத்தில் வீசுகிறார்கள் . கொன்று தீர்த்து விட்டு தப்பித்து ஓடி விடுவோம் என்று மிரட்டுகிறார்கள் . எங்கள் உயிருக்கு எந்த நேரத்திலும் பாதுகாப்பு இல்லை.  எங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூறி செங்கல்பட்டு சிறார் சீர்நோக்கு இல்லத்தில் ஊழியர்கள்
தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

 செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுவர் சீர்நோக்கு இல்லம் இயங்கி வருகிறது .  இந்த இல்லத்தில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு தாம்பரத்தைச் சேர்ந்த சிறுவன் பாதுகாப்பிலிருந்து பாதுகாவலர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ச்ஹ்

 கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு செங்கல்பட்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து இரண்டு பேர் தப்பித்து சென்று உள்ளார்கள்.   இந்த நிலையில் நேற்று முன் தினம் மூன்று பேர் தப்பித்து சென்றிருக்கிறார்கள்.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் செங்கல்பட்டு சிறார் சீர் நோக்கு இல்லத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

 சீர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்கள் தங்களிடம் மரியாதையாக நடந்து கொள்ள கொள்ள மாட்ட நடந்து கொள்ளவில்லை . அவர்களை கண்டிக்கவும் முடியவில்லை. கண்டித்தால் அரசு தங்களை கண்டிக்கிறது .  அதே நேரம் அந்த சிறுவர்களிடமிருந்து தங்களுக்கு பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் .

சீர்திருத்த பள்ளி மாணவர்களை சமாளிப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல . உரிமையில் அசிங்க அசிங்கமாக திட்டுகிறார்கள் சிறுநீரை பிடித்து முகத்தில் வீசுகிறார்கள் அவர்களை கட்டுப்படுத்துவது என்பது பெரிய வேலையாக இருக்கிறது அவர்களை திட்டினாலும் அரசு எங்களை திட்டுகிறது .  உங்களை  எல்லாம் கொன்று விட்டு தப்பித்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.  

 படாத பாடு படுத்தி வருகிறார்கள். அவர்களால் எங்களின் உயிர் எங்களால் நிம்மதியாக பணி செய்ய முடியவில்லை.  மன உளைச்சல் அதிகமாகிறது.  எங்கள் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.  உயிருக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் பணி நேரத்தில் கூடுதலாக பணியாட்கள் நியமிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.