காலில் கல்லைத்தூக்கி போட்டதால் தலையில் கல்லைத்தூக்கி போட்டு கொன்ற இளைஞர்கள்

 
a

ஏழு பேர் சேர்ந்து இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.  பழிக்கு பலியாக இந்த சம்பவம் நடந்திருக்கிறது.  இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவருமே 18 வயது முதல்  20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது . 

சென்னையில் அயனாவரம் பகுதியில் வசித்து வந்தவர் கருணா .  26 வயதான இந்த இளைஞர் அயனாவரத்தில் தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்திருக்கிறார்.   

 கடந்த ஆண்டில் நவம்பர் மாதத்தில் கருணாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே துக்க துக்க நிகழ்ச்சி ஒன்றில் தகராறு ஏற்பட்டிருக்கிறது.   இதில் கருணா உட்பட அவரின் நண்பர்கள் ஐந்து பேர் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட அந்த கும்பலில் உள்ள யோனா என்ற இளைஞர் மீது கல்லை தூக்கி போட்டு இருக்கிறார்கள்.   காலில் பலத்த காயம் அடைந்த இளைஞர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் .

க்

இந்த தாக்குதல் சம்பவத்தில் கர்ணா உட்பட அவரது நண்பர்கள் ஆறு பேர் மீது கொலை முயற்சி பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.  கடந்த மார்ச் மாதம் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார் கருணா.  அன்று முதல் அவரை பழிக்கு பழிவாங்க வேண்டும் என்று யோனாவும் அவரது நண்பர்களும் திட்டம் தீட்டி வந்திருக்கிறார்கள் .

இந்த நிலையில் நேற்று இரவு ஒன்பது முப்பது மணி அளவில் யோனாவும் அவரது நண்பர்கள் ஏழு பேரும் சேர்ந்து கர்ணாவை கொலை செய்ய முடிவு எடுத்திருக்கிறார்கள்.   நேற்று இரவு கருணாவை தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருக்கிறார்கள்.  பின்னர் அனைவரும் அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார்கள் .

தகவல் அறிந்த தலைமைச் செயலக குடியிருப்பு காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி தப்பிச்சென்ற ஏழு பேரையும் பிடிக்க தேடி வந்துள்ளனர்.   அந்த ஏழு பேரில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  அவரிடம் நடத்திய விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது .  குற்றவாளிகள் அனைவருமே 18 வயது முதல் 20க்கு வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.  மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் அயனாவரம் பகுதியில் இந்த கொலை நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

 கருணா தற்போது படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.  அவரை போல் அவரின் தந்தை ரவி ரவியும் கடந்த 2015 ஆம் ஆண்டில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.   ரவி படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கர்ணாவும் படுகொலை செய்யப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.