அந்த வீடியோவை எல்லாரிடமும் காட்டுவேன்..மிரட்டிய கள்ளக்காதலியை எரித்துக்கொன்ற இளைஞர்

 
l

 தன்னைவிட வயதில் மூத்த பெண்ணுடன் கள்ள உறவில் இருந்து வந்த அந்த இளைஞர் திடீரென்று திருமணத்திற்கு தயாரானதால் அதை எதிர்த்த கள்ளக்காதலி, தன்னுடன் இத்தனை நாளும் உல்லாசமாக இருந்துவிட்டு இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தால் நாம் இருவரும் சேர்ந்து இருந்தபோது எடுத்த வீடியோ போட்டோக்களை எல்லோரிடமும் காட்டி விடுவேன் என்று மிரட்டியதால் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்திருக்கிறார்  இளைஞர்.

 திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பெண் பிரேமா.  30 வயதான இந்த பெண்ணுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.   கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.   அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற 25 வயது இளைஞருடன் பிரேமாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது . 

f

இந்த பழக்கம் பின்னர் கள்ள உறவாக மாறி இருக்கிறது.   பிரேமாவும் விஜய்யும் அடிக்கடி தனிமையில்  உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.  இதற்கிடையில் விஜய்க்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருக்கிறார்கள்.   இதற்காக தீவிரமாக பெண் பார்த்து வந்திருக்கிறார்கள்.  இது பிரேமாவுக்கு தெரிய வந்திருக்கிறது.

 என்னுடன் இத்தனை நாளும் உல்லாசமாக இருந்துவிட்டு இப்போது வேறு ஒரு பெண்ணை ஏன் திருமணம் செய்கிறாய்?  அதற்கு என்னையே நீ திருமணம் செய்து கொள் என்று கேட்டிருக்கிறார்.   இதனால் பிரேமாவுக்கும் விஜய்க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.  இதில் ஆத்திரம் அடைந்த பிரேமா,  என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நீயும் நானும் ஒன்றாக இருந்தபோது எடுத்த வீடியோ போட்டோவை எல்லாம் எல்லோரிடமும் காட்டி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

 இதில் ஆத்திரமடைந்த விஜய் பிரேமாவிடம் இருந்த செல்போனை பிடுங்கி இருக்கிறார்.   செல்போனை தர மறுத்து பிடிவாதமாக இருந்திருக்கிறார்.  இதனால் மேலும் ஆத்திரமாகி மண்ணெண்ணையை எடுத்து பிரேமா மேல் ஊற்றி கொளுத்தி வைத்திருக்கிறார்.   உடல் தீப்பற்றி எரிந்ததும் பிரேமா போட்ட அலறல் சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.   மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் பிரேமா.   இதன் பின்னர் கொலை வழக்காக பதிவு செய்து விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீசார்.