‘’என் தந்தையை கட்டி வைத்து அடிக்க போகிறேன் பார்த்து ரசி!’’ -கள்ளக்காதலிக்கு லைவ் காட்டிய இளைஞர்

 
k

நம் கள்ளக்காதலுக்கு எதிராக இருக்கும் என் தந்தையை கட்டி வைத்து அடிக்க போகிறேன் பார்த்து ரசி என்று கள்ளக் காதலிக்கு வீடியோ கால் செய்து தந்தையை கட்டி வைத்து கொடூரமாக அடித்திருக்கிறார் மகன்.   இதனால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.  ஆந்திர மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.

 ஆந்திர மாநிலத்தில் சித்தூரை சேர்ந்தவர் டெல்லி பாபு.   இவர் இவரது மகன் பாரத் .  தந்தை டெல்லி பாபு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்திருக்கிறார்.   அவரின் மகன் 21 வயது இளைஞர் பாரத் சுவை தூக்கும் தொழிலாளியாக இருந்து வந்த வருகிறார்.

l

 பாரத்திற்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது.   இதனால் பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்து வந்திருக்கிறார்.   இதை அறிந்த டெல்லி பாபு ,  உன்னை விட வயதில் பல மடங்கு மூத்த பெண். அப்படி இருக்கும்போது இந்த பழக்கம் வேண்டாம் என்று கண்டித்து இருக்கிறார்.   ஆனாலும் பாரத்,  கள்ள உறவை கைவிடாமல் இருந்திருக்கிறார்.

 இதனால் டெல்லி பாபு சித்தூர் ரெண்டாவது டவுன் போலீசில் இது குறித்து புகார் செய்திருக்கிறார்.   போலீசார் பாரத்தை அழைத்து இனி மேல் அந்த பெண்ணுடன் உறவை கைவிடும்படி கண்டித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.   இதனால் ஆத்திரமடைந்த  பாரத் ,  வீட்டிற்கு வந்ததும் கள்ள காதலிக்கு வீடியோ கால் செய்திருக்கிறார்.  

 நம் உறவுக்கு எதிராக தடையாக இருக்கும் என் அப்பாவை அடித்து உதைக்க போகிறேன் .  இதை நீ பார்த்து ரசி என்று சொல்லிவிட்டு,  தந்தையை தூணில் கட்டி வைத்து கொடூரமாக அடித்திருக்கிறார் . இதை கள்ளக்காதலை பார்த்து ரசித்துக்கொண்டே இருந்திருக்கிறார்.   தன் காதலி மேலும் ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒரு கட்டையை எடுத்து வந்து தந்தையின் தலையில் ஓங்கி அடித்திருக்கிறார்.  இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியிருக்கிறது.

 டெல்லி பாபு  அலறல் சத்தத்தை கேட்டுவிட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்திருக்கிறார்கள் . அவர்கள் டெல்லி பாபுவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் . ஏற்கனவே கவுன்சிலிங் கொடுத்து அனுப்பப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பாரத்தை கைது செய்து உள்ளனர்.