கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பெண்

 
gl

தன்னுடன் கள்ள உறவில் இருந்து வரும் இளம் பெண் கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

 ஈரோடு மாவட்டத்தில் பவானி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற 27 வயது வாலிபர்,  உறவுக்கார பெண் மீனாதேவி உடன் கள்ள உறவில் ஈடுபட்டு வந்திருக்கிறார். ஏற்கனவே திருமணம் ஆன மீனா,  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரைப் பிரிந்து குழந்தை உடன் வசித்து வருகிறார். 

 மீனாவுக்கும் கார்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு  நாளடைவில் கள்ள உறவாக மாறி இருக்கிற.  து இரண்டு பேரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து இருக்கிறார்கள்.  அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.

fi

 இந்த நிலையில் தான் கார்த்திக்கு வேறொரு  பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.  அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி வந்திருக்கிறார் .  இந்த விஷயம் மீனாவுக்கு தெரிய வந்ததும் இத்தனை நாளும் தன்னுடன் உல்லாசம் அனுபவித்துவிட்டு இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா என்று ஆத்திரத்தில் நேற்று மதியம் கார்த்திக்கிடம் இது குறித்து வாக்குவாதம் செய்து இருக்கிறார்.

 என்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறியா என்று கேட்க , ஆமாம் என்று கார்த்திக், சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   இந்த வாக்குவாதம் முற்றி தகராறு ஆகி இருக்கிறது.   இதில் ஆத்திரமடைந்த மீனா,  அடுப்பில் கொதிக்க வைத்திருந்த பாமாயில் எண்ணெய்யை எடுத்து  கார்த்திக் மீது ஊற்றி இருக்கிறார்.

 இந்த சம்பவத்தில் கார்த்திக்கின் முகம், தோள்பட்டை வெந்திருக்கிறது.  எரிச்சல் தாங்க முடியாமல் கார்த்திக் அலறி துடித்து இருக்கிறார்.  இதை பார்த்ததும் மீனா தப்பி ஓடி இருக்கிறார் .   கார்த்திக் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரை பவானியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள் . பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.   அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.

 தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி தப்பி ஓடிய மீனாவை தேடி வந்தனர்.   நேற்று இரவு 10 மணி அளவில் மீனாவை போலீசார் கைது செய்துள்ளனர்.