ஆண் நண்பரை அடித்துக் கொன்ற பெண்! திருமணத்திற்கு வற்புறுத்தியதால் ஆத்திரம்!

 
p

 ஓட்டல் அறையில் மது அருந்திவிட்டு இருவரும் உல்லாசமாக இருந்த போது திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்திய தால் ஆண் நண்பரை அடித்துக் கொலை செய்திருக்கிறார் பெண். 

 திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய பெண்களை ஆண்கள் அடித்துக்கொண்டு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.  ஆனால் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்திய ஆண் நண்பரை மது போதையில் அடித்துக்  கொலை செய்துவிட்டு நாடகமாடிய பெண் செயல் பெரிய மேடு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். 41 வயதான இந்த வாலிபர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் .  இன்னும் திருமணம் ஆகவில்லை.  இவர் நேற்று காலையில் தனது பெண் தோழி ஒருவருடன் பெரிய மேட்டில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்.  இருவரும்  மது அருந்திவிட்டு உல்லாசமாக இருந்திருக்கிறார்கள்.  

pr

 இரவில் பிரகாஷ் உடன் வந்த அந்த பெண் விடுதி மேலாளரிடம் சென்று,  தன்னுடன் வந்த நபர் இறந்து விட்டதாக கூறியிருக்கிறார்.  இதைக் கேட்டு விடுதி மேலாளர் அதிர்ச்சி அடைந்து பெரிய மேடு போலீசுக்கு தகவல் அளித்து இருக்கிறார்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

 பிரகாஷ் உடன் தங்கியிருந்த பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.  விசாரணையில் அந்தப் பெண் பிரியா என்பதும் , அவருக்கு 42 வயது என்பதும்,  கொசப்பேட்டையில் அவர் வசித்து வருவதும் தெரிய வந்தது.  பிரியாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.  கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதும் தெரிய வந்திருக்கிறது. 

 5 வருடங்களுக்கு முன்பு ஓட்டேரியில் உள்ள  அப்பள கம்பெனியில் வேலை பார்த்து வந்தபோது அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்த பிரகாஷ் உடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.  கடந்த மூன்று வருடங்களாக இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்திருக்கிறார்கள். 

 இந்த நிலையில் தான் நேற்று பெரிய மேடு ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்கள்.  அப்போது பிரகாஷ் உயிரிழந்திருக்கிறார்.  பிரகாஷின் மரணம் இயற்கையானது என்று பிரியா சொல்ல போலீசார் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் உண்மையான காரணம் தெரிய வரும் என்று கூறி இருக்கிறார்கள். 

இதற்கிடையில் பிரதேச பரிசோதனை அறிக்கை வந்ததும் , அதில் தலையில் ஏற்பட்ட உட்காயம் காரணமாக பிரகாஷ் மரணம் அடைந்திருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.   இதை அடுத்து பிரியாவிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நத்தியதில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார் பிரகாஷ்.  இதனால் மது போதையில் இருந்தபோது இருவருக்கும் சண்டை ஏற்பட்டது.  அப்போது கையால் இருவரும் தாக்கிக் கொண்டோம்.  ஆத்திரத்தில் பிரகாசை பிடித்து தள்ளினேன்.  கீழே விழுந்த விழுந்த பிரகாஷ் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார் என்று  கூறியிருக்கிறார்.  இதன் பின்னர் பிரியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.