பிரபல ஓட்டலின் 12ஆவது மாடியில் இருந்து குதித்த பெண் டாக்டர்

 
h

தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த டாக்டர் பிரபல ஹோட்டலில் தனது பிறந்த நாளை  கொண்டாடியவர் 12வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்திருக்கிறார்.  அது தற்கொலையா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் வசித்து வந்தவர் சதா ரஹமத்.  34 வயதான அவர் டாக்டர்.  அந்த அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியில் இருந்து வந்துள்ளார். 

 நேற்றைய தினம் அவருக்கு பிறந்தநாள்.  இதனால் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் இருந்த பிரபல ஓட்டலுக்கு சென்று இருக்கிறார் .  அங்கு 12ஆவது மாடியில் அறை எடுத்து தங்கி இருக்கிறார்.  

b

இந்நிலையில் நேற்று காலையில் 5:00 மணி அளவில் ஹோட்டல் காவலாளி ஹோட்டலை சுற்றி ரோந்து வந்திருக்கிறார்.   அப்போது டாக்டர் சதார் ரஹ்மத் கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்து இருக்கிறார்.  அந்த ஓட்டலில் அவர் 12வது மாடியில் தங்கி இருந்திருக்கிறார்.  அங்கிருந்து கீழே குதித்து உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது. 

 இதை அடுத்து காவலாளி ஹோட்டல் நிர்வாகத்திற்கு தகவல் தர,  ஹோட்டல் நிர்வாகத்தினர் கோழிக்கோடு போலீசாருக்கு தகவல் தர,  ஓட்டலுக்கு வந்த போலீசார் டாக்டர் உடலை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

  டாக்டர் சதா அகமத் 12வது மாடியில் அறை எடுத்து தங்கி இருக்கிறார் . அங்கிருந்து அவர் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை அவரது மரணத்திற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.  பிரேத பரிசோதனை வந்த பின்னர் தான் மேற்கொண்டு விவரங்கள் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.  

 சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.