காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணை வெட்டி பிரியாணி போட்ட வில்லங்க காதல் ஜோடி... 'திடுக்' தகவல்கள்
ஆக்ரா ரயில் நிலையத்தில் சிவப்பு நிற சூட்கேசில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் பரபரப்பு சம்பவம் வெளியாகியுள்ளது.

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது ஒரு பொதுப்பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசிய நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமாக சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதற்குள் அடையாளம் தெரியாத நிலையில் மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆக்ரா போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். சடலம் தொடர்பான தடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அந்த சூட்கேஸ் உள்ளே ஒரு கடையின் பை கிடைக்குது..அது ஒரு துணி கடை பை முகவரி சென்னை என இருந்ததால் இதுகுறித்து ஆக்ரா போலீஸ், சென்னை போலீசிடம் தகவல் தெரிவித்தது.
பல மணி நேரம் நடைபெற்ற தீவிர ஆய்வில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும், பெண்ணும் அதை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பயணித்தது கண்டறியப்பட்டது. அவர்கள் சென்ற சாலையில் இருந்த 200 க்கும் மேற்பட்ட கேமரா மற்றும் அதில் நூற்றுக்கணக்கான footage ஆய்வு செய்து அந்த ஜோடியின் வீட்டை சென்னை போலீசார் கண்டுபிடித்தனர். வீட்டை திறந்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சியில் மூழ்கினர். காரணம் வீட்டில் ஒரு பக்கம் ஒரு பிரியாணி அண்டா இருந்தது. அதில் மனித மாமிசத்தை வைத்து பிரியாணி சமைத்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை வெட்டி பிரியாணி சாப்பிட்டு மீதி உடலை சூட்கேசில் வைத்து சென்றதை போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணையில் காதலர்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கொன்றது தெரியவந்தது. ஒடிசாவை சேர்ந்த பசுபதி மாஜி என்ற பெண்ணும், ஒடிசாவை சேர்ந்த மாணிக் லஸ்கர் என்ற பையனும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே வீட்டில் தங்கி நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளனர். இந்நிலையில் ஏற்கனவே மாணிக் லஸ்கருக்கு, பெருங்களத்தூரை சேர்ந்த நிஷா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு வரை நிஷா இந்த காதலர்களோடு கூடுவாஞ்சேரியில் உள்ள வீட்டில் ஒன்றாக தங்கியிருந்துள்ளார். இருவரின் காதலுக்கு நிஷா எதிர்ப்பு தெரிவித்ததால் நிஷாவை காதலர்கள் துண்டுதுண்டாக வெட்டி பிரியாணி செய்ததும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள பசுபதி மாஜி மற்றும் மாணிக் லஸ்கரை போலீசார் தேடிவருகின்றனர்.

