காப்பாற்றச் சொன்ன கள்ளக்காதலியை கொன்று தூக்கில் தொங்கவிட்ட வாலிபர்

 
fi

தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததால் கள்ளக்காதலியை விட்டு விலகி இருந்திருக்கிறார் அந்த வாலிபர்.  ஆனால் அவருடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது தன்னை நீ தான் காப்பாற்ற வேண்டும் நீதான் வைத்து குடும்பம் நடத்த வேண்டும் என்று அந்த பெண் பிடிவாதம் பிடிக்க , தன் திருமணத்திற்கு இடையூறாக இருப்பார் என்று நினைத்து கள்ளக்காதலியை கொன்று தூக்கில் தொங்கியது போல் செட்டப் செய்து இருக்கிறார் அந்த வாலிபர்.  ஆனால் அப்பெண்ணின் பெண்ணை அடித்து உதைத்ததில் ஏற்பட்ட காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை கொடுத்து வந்த நிலையில் தானாகவே சென்று சரணடைந்திருக்கிறார் .  

 காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில்  வசித்து வந்தவர் வெங்கடேசன்.  இவரின் மனைவி புஷ்பா.   கூலி வேலை செய்து வரும் வெங்கடேசன் வழக்கம் போல் வேலை முடிந்து வந்து வீட்டிற்கு வந்தபோது தன் மனைவி புஷ்பா தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார். 

d

 ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கவும் அவர்கள் வந்து புஷ்வாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   அப்போது புஷ்பாவின் உடலில் இருந்த காயங்கள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டிருக்கலாம் என்று கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வந்த போதுதான்,  புஷ்பாவுக்கு ஆண் நண்பர்கள் இருந்தார்கள் என்றும், அவருக்கு மது அருந்தும் வழக்கம் இருந்தது என்றும் கூறியிருக்கிறார்கள்.

 இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த யோபு என்கிற 28 வயது வாலிபர் திருவள்ளூர் மணவாள நகர் காவல் நிலையத்தில் சென்று புஷ்பாவை கொலை செய்ததாக சரணடைந்திருக்கிறார்.  அதன் பின்னர் அவரை ஸ்ரீபெரும்புதூர் போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது,  புஷ்பா உடன் கள்ள உறவு இருந்து வந்தது.   இந்த நிலையில் தனக்கு திருமணம் நடக்க இருந்ததால் புஷ்பாவிடம் இருந்து விலகி இருந்தேன்.  ஆனால் புஷ்பா சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தினார்.  

 அதனால் அவர் வீட்டிற்கு சென்று இருவரும் வழக்கம் போல் மது அருந்திக் கொண்டிருந்தோம்.  அப்போது நீ தான் என்னை கடைசி வரைக்கும் காப்பாற்ற வேண்டும் என்று புஷ்பா குடிபோதையில் வற்புறுத்துக்கொண்டே இருந்தார். இவர் இப்படியே செய்தால் தனக்கு திருமணம் ஆவது தடைப்பட்டு போய்விடுமோ என்று பயந்தேன். அதனால் புஷ்பாவை கடுமையாக  தாக்கினேன்.  இதில் அவருக்கு நிலை தடுமாறி கீழே விழுந்தார்.  அப்போது சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் அவர் தூக்கிட்டு மாட்டிக்கொண்டது போல் செய்துவிட்டு தப்பி வந்து விட்டேன் என்று கூறியிருக்கிறார்.  அதன் பின்னர் போலீசார் யோபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.