நடுரோட்டில் காதலியை 10 முறை கத்தியால் குத்தி கொன்ற வாலிபர்

 
lஎ

 உருகி உருகி காதலித்து விட்டு திடீரென்று திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சொன்னதால் ஆத்திரமடைந்த வாலிபர் காதலியை நடுரோட்டில் வைத்து பத்து முறை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார் .  பெங்களூருவில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடாவைச் சேர்ந்தவர் லீலா.   25 வயதான இந்த இளம்பெண் பெங்களூருவில் முருகேஷ்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.   ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்த 28 வயது வாலிபர் தினகர் பனலாவும் பெங்களூருவில் டொம்லூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்திருக்கிறார் .

ட்

பெங்களூருவில் ஏற்பட்ட பழக்கத்தில்  லீலாவும் தினகரும் காதலித்து வந்துள்ளனர்.   ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் காதலித்து வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் தினகர் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பெண் தர மறுத்து இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இதன் பின்னர் தினகரிடம் இனிமேல் தன்னை சந்திக்க வேண்டாம் நம் காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.   என்ன சொன்னாலும் சம்மதிக்க மாட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

 நீ என்ன சொல்கிறாய் என்று கேட்கவும்,  என் பெற்றோரின் விருப்பம் தான் என் விருப்பம் என்று சொல்லி இருக்கிறார் லீலா.   இதன் பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்று லீலாவிடம் கேட்டிருக்கிறார் தினகர் .  ஆனால் பிடிவாதமாக முடியாது என்று மறுத்திருக்கிறார்.   இதனால் லீலாவை எப்படியும் கொலை செய்து விட வேண்டும் என்று ஆத்திரத்தில் இருந்திருக்கிறார் தினகர்.

 லீலா வேலை செய்யும் அலுவலகத்தின் வாசலில் அவருக்காக காத்துக் கொண்டிருந்திருக்கிறார்.  இரவு 7:30 மணி அளவில் வேலை முடிந்து லீலா அலுவலகத்தை விட்டு வெளியே வரவும் அவருடன் திருமணம் குறித்து பேசி இருக்கிறார்.  இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.  அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 10 முறை ஆவேசமாக குத்தி இருக்கிறார்.  

 அப்போது சாலையில் சென்றவர்கள்,  அப்பகுதியில் இருந்து அனைவரும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.  அது குறித்த உடனே ஜீவன் பீமா நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் . போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினகரை கைது செய்துள்ளனர்.  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்த லீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் போலீசார்.