‘அது’க்காக காத்திருந்த ஆசிரியர் -மாணவி! அது வந்ததும் எஸ்கேப்

 
l

பதினெட்டு  வயது  பூர்த்தியாகவேண்டும் என்பதற்காக காத்திருந்த மாணவியும் ஆசிரியரும் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததும் இருவரும் எஸ்கேப் ஆகி இருக்கிறார்கள் . பெற்றோர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் காவல் நிலையத்திற்கு வந்த அந்த மாணவியிடம் பெற்றோர் எவ்வளவோ கதறியும் மன்றாடி கேட்டும் ஆசிரியரைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று இறுதியாக இருந்ததால்,  அவருக்கே திருமணம் செய்து வைப்பதாக சொல்லி சம்மதம் தெரிவித்து திருமணம் வரைக்கும் தங்கள் வீட்டில் இருக்கட்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு ஆசிரியர் அவர் வீட்டுக்கும் அந்த மாணவி அவரின் வீட்டிற்கு சென்று இருக்கிறார்கள்.

 கன்னியாகுமரியில் கிள்ளியூர் பகுதியில் இயங்கி வருகிறது அந்த தனியார் பள்ளி.  அங்கே கிள்ளியூரை சேர்ந்த 32 வயது வாலிபர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.   திருமணமாகாத அவர் அதே பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்த மாணவியை காதலித்து வந்திருக்கிறார்.   இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்திருக்கிறார்கள்.   ஆனால் 18 வயது நிறைவடையாததால் அந்த மாணவிக்கு 18 வயது ஆகும் வரைக்கும் இருவரும் காத்திருந்திருக்கிறார்கள்.  

jo

 பெற்றோர்களோ பிளஸ் டூ படித்து முடித்து விட்டதால் தங்கள் மகளுக்கு மேல்படிப்பு படிக்க செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வந்திருக்கிறார்கள்.  ஆனால் அவர்களின் மகளோ 18 வயது நிறைவடைந்து 19 வயது பிறந்ததும் தனது பிறந்த நாளை தோழிகளுடன் கொண்டாடப் போவதாக சொல்லிவிட்டு வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்.  

 பல மணி நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் விசாரித்த போது தான், தேடியபோதுதான் பள்ளியின் ஆங்கில ஆசிரியருடன் காதலில் இருந்து வந்தது தெரிய வந்திருக்கிறது.   18 வயது நிறைவடைந்ததும் ஆசிரியருடன் ஓடிப் போயிருக்கிறார் என்பதும் தெரிய வந்திருக்கிறது.   இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.   போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஆசிரியரையும் மாணவியையும் தேடி வந்திருக்கிறார்கள் .

தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்ததும் மாணவியும் ஆசிரியரும் காவல் நிலையத்தில் ஆஜராகி இருக்கிறார்கள்.  அங்கு வந்த பெற்றோர் தங்களின் மகளைப் பார்த்து கதறி அழுருக்கிறார்கள்.   தங்களுடன் வரும்படி மன்றாடி கேட்டிருக்கிறார்கள்.   ஆனால் அந்த மாணவியோ ஆசிரியருடன் தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.   பின்னர் ஆசிரியரின் பெற்றோரும் மாணவியின் பெற்றோரும் கலந்து பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதாக முடிவு எடுத்திருக்கிறார்கள் .  

திருமணம் நடக்கும் வரை மாணவி தங்கு தங்கள் மகள் தங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.   இதை இரு விட்டாரும் போலீசாரிடம் எழுத்து மூலமாக எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.