தப்பியோடி பள்ளி கழிவறைக்குள் ஒளிந்துகொண்ட மாணவிகள்! மேற்கூரையை உடைத்து குதித்து பாலியல் வன்கொடுமை

 
ர்

பள்ளி வளாகத்திற்குள் விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள் காமப்பிசாசிடம்  இருந்து தப்பிக்க ஓடிச்சென்று பள்ளி கழிவறைக்குள் புகுந்து தாழிக்கொண்டனர்.  அப்படியும் விடாத அந்த வெறிபிடித்த மிருகம், மேற்கூரையை உடைத்து கழிவறைக்குள் குதித்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது.

 பீகார் மாநிலத்தில் பெகுசராய் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.  அம்மாவட்டத்தில் பஞ்ச்வீர் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.   பள்ளி முடிந்த நேரத்தில் சென்று அந்த வளாகத்தில் விளையாடிக்கொண்டு இருந்தபோது சோட்டி என்கிற நபர் மதுபோதையில் வந்து சிறுமிகளிடம் தவறாக நடக்க முயற்சித்து இருக்கிறார் .

ஹ்

இதனால் அச்சத்தில் சிறுமிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்று இருக்கிறார்கள்.   மது போதையில் இருந்த சோட்டி சிறுமிகளை விடாமல் துரத்தி இருக்கிறார். இதில் சிறுமிகள் இருவரும் பள்ளி வளாகத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியும் விடாமல் கழிவறையின் மேற்கூறையை உடைத்து உள்ளே இறங்கி இருக்கிறார் சோட்டி. 

 கழிவறையில் வைத்து சிறுமிகளில்  ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.   மற்றொரு சிறுமியையும் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்து இருக்கிறார்.  அதற்குள் அந்த சிறுமி சோட்டியின் பிடியில் இருந்து தப்பி ஓடி இருக்கிறார். 

 இதற்கிடையில் சிறுமிகளின் தொடர் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தஅக்கம் பக்கத்தினர் சிறுமிகளை மீட்டுள்ளனர்.  பொதுமக்கள் திரண்டு வருவது அறிந்ததும் சோட்டி அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.   படுகாயம் அடைந்த சிறுமிகளை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.   அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

சம்பவம் குறித்து அறிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சோட்டியை கைது செய்துள்ளனர்.  பள்ளி வளாகத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   பொதுமக்கள் ஆவேசத்தில் இருப்பதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.