தாயின் கழுத்தை கயிற்றால் இறுக்கிக் கொன்ற மகன்

 
m

தாயின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்திருக்கிறார் மகன்.   மது அருந்த பணம் தராததால் இந்த கொடூர செயலை செய்திருக்கிறார் அந்த வாலிபர்.

 கேரள மாநிலத்தில் ஆழப்புழா மாவட்டம் குறத்தி காடு.  இப்பகுதியைச் சேர்ந்தவர் மோகன்.  இவரின் மனைவி ரமா.  இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.  இதில் இளைய மகன் நிதின் என்கிற 28 வயது வாலிபர் இருந்து உள்ளார் . 

மது போதைக்கு அடிமையான நிதின் தினமும் வேலைக்கு செல்லாமல் மது அருந்திவிட்டு ஊரில் இருப்பவர்களிடம் வீண் தகராறு வளர்த்து வந்திருக்கிறார் .  வேலைக்குச் செல்லாததால் கையில் பணம் இல்லாததால் மது அருந்த பணத்திற்காக அடிக்கடி தாயி ரமாவிடம் கேட்டு தொந்தரவு செய்து வந்திருக்கிறார்.   பணம்  தராமல் இருக்கும் போது தகராறு செய்து வாங்கிச் சென்றிருக்கிறார்.

mm

 நேற்றைய தினமும் வழக்கம் போல் மது அருந்து பணம் கேட்டிருக்கிறார் நிதின் பணம் கொடுக்காமல் இருந்திருக்கிறார்.   இதனால் ஆத்திரத்தில் இருந்த நிதின் கயிற்றை எடுத்துக் கொண்டு தாயின் கழுத்தில் போட்டு இறுக்கி இருக்கிறார்.  இதில் தாய் மயங்கி ரமா மயங்கி சரிந்து இருக்கிறார்.  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிதின் வீட்டை விட்டு வெளியேறி சென்று இருக்கிறார்.

 சிறிது நேரம் கழித்து ரமாவின் மூத்த மகன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தாய் மயங்கி கிடப்பதை பார்த்துவிட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்து நிறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்கள்.   இதன் பின்னர் போலீசார் வந்து ரமாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.

 இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் பெற்ற தாயை மகன் நிதின் கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.  பணம் தராததால் பெற்ற தாயை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்க நிதினை போலீசார் கைது செய்துள்ளனர்.