மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன்

 
கொலை

வாணியம்பாடி அருகே காட்டு பகுதியில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் கொலை வழக்கில் மருமகன் கைது

திருப்பத்தூர் மாவட்டம்,  வாணியம்பாடி அருகே துருஞ்சிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (55). இவரது மனைவி மங்கம்மாள்(51). இவர் நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 100 நாள் திட்டம் வேலைக்கு சென்று அன்று பிற்பகல் வீடு திரும்பியுள்ளார். பின்னர் வீட்டிற்கு விறகு எடுத்துவர அருகில் உள்ள காப்பு காட்டு பகுதிக்கு சென்ற அவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், நேற்று பிற்பகல் காட்டு பகுதி வழியாக சென்ற நபர் ஒருவர், காட்டில் பெண் சடலம் இருப்பதாக ஆலங்காயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். 

தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தினார். பின்னர் கொலையாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படை பிரிவு போலீசை அமைத்தார். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த பெண்ணின் உறவினரான சங்கர்(35) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சங்கர் என்பவருக்கு கொலையான பெண் மங்கம்மாள் சொந்த மாமாவின் மனைவியாகும். மங்கமாலுக்கு பல பேருடன் கள்ள தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

31vndvp1_3108chn_187_1

இந்நிலையில் மங்கம்மாள் தன்னுடைய காதலன் செல்வகுமார் என்பவரை காட்டு பகுதிக்கு வரச் சொல்லிவிட்டு தனியாக காட்டை நோக்கி விறகு வெட்ட சென்றுள்ளார். மங்கம்மாள் தனியாக காட்டை நோக்கி செல்வதை பார்த்த சங்கர் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார். ஆனால் காட்டு பகுதிக்கு செல்வகுமார் வராததால் இதனை பயன்படுத்தி சங்கர் தன் மாமியான மங்கம்மாளுக்கு  உதவி செய்வது போல் அவருடன்  விறகு வெட்டும் பணியில் ஈடுபாட்டார்.  

பின்னர் மற்றவருக்கு சந்தோஷம்  கொடுப்பது போல் என்னுடனும் இரு என வற்புறுத்தி உள்ளார். இதற்கு மங்கம்மாள் நீ எனக்கு உறவினர், மேலும்  உனக்கு வயது குறைவாக உள்ளது. அதனால் முடியாது என்று கூறியுள்ளார். மீறி நீ தொந்தரவு கொடுத்தால் நான் ஊரில் சொல்லிவிடுவேன் என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த சங்கர், வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இது தொடர்பாக மங்கம்மாள் உறவினர்களிடம் சொல்லிவிட்டால் ஊரில் தலை காட்ட முடியாது என்று நினைத்து மங்கம்மாள் வைத்திருந்த டவலில் கழுத்தை நெரித்து கொலை செய்து கப்புகாட்டு பகுதியில் வீசியதாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

murder

இதனை தொடர்ந்து சங்கர் அளித்த வாக்கு மூலம் அடிப்படையில், வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், சங்கரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த கொலைக்கு பயன்படுத்திய டவல் மற்றும் விறகு வெட்ட பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு,  கொலை செய்யப்பட்ட மங்கம்மாள் காதில் இருந்த கம்பல், தாலி ஆகியவற்றையும்  போலீசார் சங்கரிடமிருந்து பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.