“இதெல்லாம் நீங்க பேசக்கூடாது”... ஆத்திரத்தில் மாமனாரை அடித்து கொன்ற மருமகன்!
திருவள்ளூர் அருகே மகளை அடித்து துன்புறுத்துவதை தட்டி கேட்ட மாமனாரை மருமகன் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த தொட்டிக்கலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி (வ/71). இவரது மகள் தமிழ்செல்வி. அதே பகுதியை சேர்ந்த ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரவீந்தர் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு தினமும் தமிழ்ச்செல்வியை ரகளையில் ஈடுபடுவதோடு அடிக்கடி பணம், கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வியை கணவர் ரவீந்தர் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது இதனால் தமிழ்ச்செல்வி தனது தந்தை வீட்டிற்கு வந்துள்ளார், அப்போது அங்கு வந்த ரவீந்தர் தகராறு செய்துள்ளார்,
இந்நிலையில் வீட்டு வாசலில் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த தமிழ்ச்செல்வியின் தந்தை ராஜி மருமகனை தட்டி கேட்டு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகன் ரவீந்தர் மாமனார் ராஜியை செங்கற்களால் கொண்டு அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை அடுத்து இந்த கொலை சம்பவம் குறித்து ராஜிவின் மகன் ரயான் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய மருமகன் ரவீந்தரை தேடி வருகின்றனர். செவ்வாப்பேட்டை போலீசார் ராஜு வரதட்சணை கேட்டு அடித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது மகளை அடிப்பதை தட்டி கேட்டதால் அடித்து கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

