திமுக ஊராட்சி மன்ற தலைவரை மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கும்பல்

 
ஆதனூர் திமுக ஊராட்சி

சென்னை அருகே திமுக ஊராட்சி மன்ற தலைவரை மாமூல் கேட்டு கொலைமிரட்டல் ரவுடி கும்பலின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ட்ட்

ஊரப்பாக்கம் அடுத்த  ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் தமிழ் அமுதன். இவர் கிளாசிக் சர்வீசஸ் என்ற பெயரில் தொழிற்சாலைகளுக்கு தேவையான பணியாளர்களை நியமிக்கும் மேன்பவர், மெயின்டனஸ் உள்ளிட்ட  தொழில் செய்துவருகிறார். மேலும்  சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். 
இது தவிர திமுகவின் ஆதனூர் ஊராட்சி கிளை கழக செயலாளராகவும், இவரது மனைவி குன்றத்தூர் ஒன்றிய குழு உறுப்பினராகவும், திமுக மகளிர் அணி காஞ்சிபுரம் மாவட்ட தலைவராகவும் இருந்து வருகின்றனர்.
 
இந்நிலையில் கடந்த ஆண்டு தங்கள் நிறுவனத்திற்காக வாங்கிய 3 பொலீரோ கார்கள் பதிவு செய்யப்பட்ட மறுநாளே மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். இது தொடர்பான புகார் நிலுவையில் உள்ள நிலையில், ஏற்கனவே கடந்த ஆண்டு மாடம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சோட்டா வினோத், ரமேஷ் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாம்பரம் அருகே என்கவுண்டரில் இறந்த நிலையில், அதே வழக்கில் தொடர்புடைய ரவுடி சதாம் ஆதனூர் ஊராட்சிமன்ற தலைவ தமிழ்அமுதனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் வெங்கடேசன் கொலை வழக்கில் தொடர்புடைய எனது தம்பிகளை ஜாமீனில் எடுக்க வேண்டும் என்றும் அதற்கு பணம் வேண்டும் என்று கேட்பதும் தரவில்லை என்றால் தட்டிவிட்டு போய்டுவேன் என்று பேசுவதும் பதிவாகி உள்ளது 

மேலும் ரவுடி சதாம் மற்றும் அவனது கூட்டாளிகள் கடந்த 6 ஆம் தேதி ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ரவுடிகள் சுற்றி சுற்றி வரும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதனூர் பகுதியை சேர்ந்த திமுக பிரமுகரும், தொழிலதிபருமான சக்கரபாணியை மாமூல் கேட்டு மிரட்டி மாமூல் தரவில்லை என்பதற்காக அவரது வீட்டு வாசலிலே கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில் சோட்டா வினோத், ரமேஷ், சதாம் உள்ளிட்ட நபர்களை தேடி வந்த நிலையில் தாம்பரம் அருகே சோட்டா வினோத், ரமேஷ் போலீசாரை தாக்கியதால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.

தற்போது ஜெயிலில் உள்ள நண்பர்களை பிணையில் எடுக்க ரவுடி சதாம் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்அமுதனிடம் மாமூல் கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது மேலும் தமிழமுதனை கொலை செய்வதற்காக ஆதனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ரவுடிகள் சுற்றி சுற்றி வரும் சிசிடிவி கேமரா காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக  எல்லைக்குட்பட்ட பகுதியில்  ரவுடிகள் தொழிலதிபர்களை மிரட்டி பணம் கேட்டு வரும் நிலையில் மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில்   சதாம் உள்ளிட்டோர் தொழிலதிபர்களை  மாமூல் கேட்டு மிரட்டி வருவது தொழில் செய்வோரிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே காவல்துறை உயரதிகாரிகள் தாம்பரம் மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாமூல் கேட்டு மிரட்டி வரும்  நெற்குன்றம் சூரியா, புல்லட் கார்த்திக், சதாம் உள்ளிட்ட ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.