மாணவிகள், இளம்பெண்களை நிர்வாணமாக நிற்கவைத்து வீடியோ பதிவு செய்த பாதிரியார்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்

 
ku

 கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை அடுத்த பாத்திமா நகரை சேர்ந்தவர் பெனடிக் ஆன்றோ.   இவர் அழகிய மண்டபம் பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.  

 கடந்த வாரம் இவரை  கடுமையாக தாக்கி விட்டு அவரிடம் இருந்து லேப்டாப்பை பறித்துச் சென்றது ஒரு கும்பல்.  இந்த சம்பவம் குறித்து பென்னடிக் ஆன்றோ போலீசில் புகார் கொடுக்கவில்லை.  ஆனால் அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில்,  போலீசார் விசாரணை நடத்தி கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் ஜினா என்பவரை கைது செய்தனர்.  

இதன் பின்னர் பெனடிக் ஆன்றோ பெண்ணுடன் இருக்கும் ஆபாச படங்கள் வலைத்தளங்களில் பரவி வந்தன. அந்த நிலையில்,  கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த ஆஸ்டின் ஜினோவின் தாயார் மினி அஜித்தா போலீசில் ஒரு பரபரப்பு புகாரை கொடுத்தார். அந்த புகாரில் பாதிரியாருடன் இருக்கும் பெண் என்  மகனின் தோழி. பாதிரியாரின்  பாலியல் தொல்லையால் தான் அவர் தற்கொலை முடிவில் இருக்கிறார் என்று கூறியிருந்தார்.  இந்த புகாரை அடுத்து பாதிரியார் பதவியை ராஜினாமா செய்வதாகவும் இனி இது போன்ற தவறுகள் செய்ய மாட்டேன் என்று கூறினார்.  பாதிரியாருக்கு பல பெண்களின் தொடர்பு இருக்கிறது என்று புகாரில் கூறியிருந்த அஜித்தா,  என் மகனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்று குறிப்பிட்டு இருந்திருக்கிறார்.

pa

 இது குறித்து ஏடிஎஸ்பி ஈஸ்வரன் விசாரணை நடத்தினார்.  இந்த நிலையில்,  பெங்களூருவில் நர்சிங் படிக்கும் குமரி மாவட்ட மாணவி ஒருவர் மார்ச் 11ஆம் தேதி எஸ்பி அலுவலகத்தில் இதே பாதிரியார் மீது பாலியல் புகார் கொடுத்திருந்தார்.   அந்த பாதிரியார் தனக்கு ஆசி வழங்கும் போது தவறான முறையில் தொட்டு பேசினார்.  செல்போன் எண்ணை  வாங்கிக்கொண்டு தொந்தரவு செய்கிறார் மிரட்டி வருகிறார் என்று கூறியிருக்கிறார்.  பாதிரியார் பணியாற்றிய ஆலயத்திற்கு சென்றபோது முதலில் சாதாரணமாக பேசி ஆசி வழங்கினார் . பின்னர் தவறான முறையில் என்னை தொட்டு பேச தொடங்கினார். இதனால் சம்பந்தப்பட்ட மத வழிபாட்டு தல பங்கை விட்டு மாறி நாங்கள் சென்று விட்டோம் . ஆனாலும் என் தாயாரிடம் என் செல்போன் நம்பரை வாங்கி பேசினார். பாலியல் ரீதியாக வாட்ஸ் அப்பில் பேசினார். வீடியோ கால் செய்தும் தொந்தரவு செய்தார்.  இது மாதிரி பல பெண்களிடம் இப்படி மோசமாக நடந்து கொள்கிறார்.  நான் பலமுறை அவரை எச்சரித்தும் போலீசில் புகார் அளிப்பேன் என்றதும் என்னை மிரட்டினார் என்று கூறியிருக்கிறார்.

நர்சிங் மாணவி கொடுத்த புகாரை எடுத்து பாதிரியாரின் பாலியல்  விவகார வழக்கு வேகம் எடுத்து இருக்கிறது.    கடந்த 13ஆம் தேதி அன்று காட்டாத்துறை அடுத்த ஆலந்தட்டு விளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீஸ் சூப்பிரண்ட்   அலுவலகத்தில் பாதிரியார் மீது புகார் அளித்திருக்கிறார்.  இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்று அந்த புகாரில் கூறியிருக்கிறார். இதனால் பாதிரியாரின் செல்ஃபோன் மற்றும் லேப்டாப்பில் பல்வேறு ஆபாச வீடியோக்கள் புகைப்படங்கள் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் எழுந்திருக்கிறது.

 இந்த புகார்களை அடுத்து பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவாக இருக்கிறார்.  பாதிரியார் நடவடிக்கை குறித்து சர்ச் நிர்வாகம் இதுவரைக்கும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 

பாதிரியார் சர்ச்சுக்கு தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பழகி அவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி வந்திருக்கிறார்.  முதலில் அன்பாக பேசி,   நாட்கள் செல்ல செல்ல இரட்டை அர்த்தத்தில் பேசி வலையில் விழ வைத்திருக்கிறார்.   தன் வலையில் விழுந்த கண்களிடம் வாட்ஸ் அப் மூலம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.  பெண்களின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக நிற்கும்படி  சொல்லி ல் வீடியோ பதிவு செய்து இருக்கிறார்.   பாதிரியாரால் பாதிக்கப்பட்ட பெண்கள் தனக்கு நடந்ததை வெளியே சொன்னால் அவமானம் என்று கருதி யாரும் வெளியே சொல்லாமல் தவித்து வருகிறார்கள்.

 இந்த நிலையில்பாதிரியாரின் பாலியல் லீலைகள் கடந்த சில நாட்களாக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.  இளம் பெண்களுடன் ஆபாச பேச்சு, ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றன.  இளம் பெண்களுடன் நிர்வாண நிலையில் நின்று பேசிய காட்சிகள் , உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் காட்சிகள்  என்று  50க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் அடுக்கடுக்கான ஆபாச வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.  இந்த விவகாரம் பெரிதானத அடுத்து கிறிஸ்தவ மத வழிபாட்டு தளத்தில் இருந்து தனது பகுதியை ராஜினாமா செய்து விட்டதாக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது. 

 அந்த கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலத்திற்கு வேறு மத போதகர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.  பாதிரியார் மீதான போலீஸ் இப்படி விஸ்வரூபம் எடுப்பதால் விசாரணைக்கு பயந்து அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.