தங்கையின் கூந்தலை பிடித்து இழுத்துச்சென்று பின்கழுத்தில் 5 முறை அரிவாளால் வெட்டிக்கொன்ற அண்ணன்

 
g

கூடப்பிறந்த தங்கையை அண்ணனே நடுரோட்டில் வைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார்.  குடும்பத் தகராறில் இந்த பயங்கர நிகழ்ந்திருக்கிறது. 

 தேனி மாவட்டத்தில் கூடலூர் அடுத்த கருநாக்கமுத்தம்பட்டியைச் சேர்ந்த பகுதியைச் சேர்ந்தவர் விமல்.  இவரின் மனைவி செல்லப் பிரியா.  இத்தம்பதிக்கு சுருதி என்ற மகள் உள்ளார். 

 கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு விமல் கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று,  கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் விடுதலையாகி கருநாக்க முத்தன்பட்டியில் மனைவி செல்லப் பிரியாவிடம் வாழ்ந்து வருகிறார்.

ko

திடீரென்று நேற்று முன்தினம்  இரவில் செல்லப்பெரியாவுக்கும் விமலுக்கும் இடையே  குடும்ப பிரச்சினையினால் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.  இதில் ஆத்திரமடைந்த விமல் செருப்பால் செல்லப் பிரியாவை அடித்திருக்கிறார்.  இதன் பின்னர் விமல் வீட்டில் இருந்து வெளியே சென்று இருக்கிறார்.  அப்போது செல்லப் பிரியாவின் அண்ணன் செல்ல பாண்டியன் விமல் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

 செல்லப்ரியாவிடம் ஒழுங்காக கணவருடன் வாழ வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார்  செல்லப்பாண்டி.  இதில் ஆத்திரம் அடைந்த செல்லப்பிரியா,  உன் வேலையை பாரு.  நீ எனக்கு புத்திமதி சொல்லாதே என்று சத்தம் போட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றிருக்கிறார்.   இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி அரிவாளை எடுத்து வீட்டிற்குள் சென்று செல்லப்பிரியாவின் கூந்தலை பிடித்து வெளியே இழுத்து வந்திருக்கிறார். 

 பின்னர்  நடு ரோட்டில் வைத்து அவரின் பின்கழுத்து பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்.  இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்திருக்கிறார்.   இதை பார்த்ததும் செல்லப்பாண்டி , விமல் இரண்டு பேரும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்கள்.

 தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்லப்பிரியாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.   அங்கு நடந்த பரிசோதனையில் செல்லப்பிரியா உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  தப்பி ஓடிய செல்லப்பாண்டி அவருக்கு உடந்தையாக இருந்த விமல் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர்களிடம் நடத்திய விசாரணையில் குடும்பத்த தகராறில் அண்ணனே தங்கையை அரிவாளால் வெட்டி கொலை செய்தது உறுதியாகியிருக்கிறது.