மருமகனுடன் தகாத உறவு... சந்தேகத்தால் கள்ளக்காதலியை தீவைத்து கொளுத்திய முதியவர்

 
தீக்குளித்து

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி (45). இவருக்கு நாகவள்ளி என்கிற மகள் உள்ளார். செல்வியின் கணவர் ஆறுமுகம் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் செல்வி தற்பொழுது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுப்ரமணி(60) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

Chennai Otteri Mother in law

செல்வியின் மகள் நாகவள்ளிக்கு கடந்த ஜனவரி மாதம் சென்னை பட்டாளம் ராமானுஜம் கார்டன் பகுதியை சேர்ந்த டில்லி பாபு (32) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. மகளுக்கு திருமணம் ஆன நிலையில் செல்வி சுப்ரமணியுடன் சரிவர பேசாமல் இருந்து வந்த நிலையில் சுப்ரமணி அடிக்கடி செல்வியிடம் தன்னுடன் பேசும் படி வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் செல்வி இது போல் பேசிக்கொண்டு இருப்பது இனிமேல் சரிவராது, இனிமேல் பேச்சை நிறுத்திக் கொள்ளலாம் என சுப்ரமணியிடம் கராராக கூறியுள்ளார் என தெரியவருகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுப்ரமணி நாகவள்ளி கணவருடன் பேசுவதால் தான் தன்னை கண்டுகொள்ளவில்லை, தன்னிடம் பேச மறுக்கிறார் என தவறாக புரிந்து கொண்டு செல்வியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். செல்வி இருக்கும் இடமான அவரது மகள் நாகவால்லி வீடான பட்டாளம் ராமானுஜம் பகுதிக்கு பெட்ரோல் வாங்கி கொண்டு சென்ற சுப்ரமணி, தன் மீதும் செல்வி மீதும் ஊற்றிக்கொண்டு கொளுத்தி விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 கள்ளக்காதலன் கைவிட்டதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்த பெண்!

இருவரும் தீயில் எரிந்துகொண்டு இருப்பதை பார்த்த செல்வியின் மருமகன் டில்லி பாபு தீயை அணைக்க முயன்றுள்ளார். அப்பொழுது அவருக்கும் தீ பரவி தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அருகே இருந்தவர்கள் ஓடி வந்து 3 பேர் மீது இருந்த தீயை அனைத்து 108 ஆம்புலன்சில் கொண்டு சென்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுப்ரமணி மற்றும் டில்லி பாபு 40 சதவிகித தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் செல்வி 90 சதவிகித தீகயத்துடன் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிகளவு தீக்காயம் ஏற்பட்ட செல்வியிடம் பிழைப்பது கடினம் என்பதால் அவரிடம் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்