ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கட்டிப்போட்டு அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள்

 
டஃப்

கும்மிடிப்பூண்டி அருகே ஆடு மேய்க்க சென்ற பெண்ணிடம், அத்து மீற முயன்ற வட மாநில தொழிலாளர்கள் இருவரை பொதுமக்கள் பிடித்து கம்பத்தில் கட்டி தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அவரை வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் வலுக்கட்டாயமாக கட்டிப்போட்டு அவரை மானபங்கப்படுத்த முயன்று உள்ளனர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடிவந்து அந்த மூன்று பேரை துரத்தி பிடிக்க முயன்றனர். அதில் ஒருவர் தப்பியோடினார். இருவரை பிடித்த பொதுமக்கள் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். 

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் துறையினரிடம் பொதுமக்கள் இருவரை ஒப்படைத்தனர். காவல்துறையினர் விசாரணையில் தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒடிசாவை சேர்ந்த அணில் குமார் நாயக் (27), ஜார்கண்டை சேர்ந்த குலுகாலேகர் (45) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இருவரையும் சிறையில் அடைத்த போலீசார் தப்பி ஓடிய ஒருவரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் வட மாநில தொழிலாளர்கள் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று தர்ம அடி வாங்கி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.