கேரளாவில் அடுத்த அதிர்ச்சி! பெண் நீதிபதியை கத்தியால் குத்து முயன்ற சிறுவன்

 
k

விசாரணையின் போது பெண் நீதிபதியை கத்தியால் குத்து முயன்றிருக்கிறான் சிறுவன் .  கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்த சம்பவம்.  

 கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தை சேர்ந்த 15வயது சிறுவன் போதை பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறான்.   வீட்டிலேயே தினமும் போதை வஸ்துக்களை பயன்படுத்தி வந்திருக்கிறான்.  இதற்காக தாயிடம் பணம் கேட்டு தினமும் தகராறு செய்து வந்ததால்,   தாய் அதை தட்டி கேட்டதற்காக வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உதைத்து சேதப்படுத்தி இருக்கிறான்.

c

 இதில் கடும் விரக்தி அடைந்த தாயார் , தன் மகன்  பற்றி போலீஸிடம் புகார் அளித்திருக்கிறார்.   போலீசார் அந்த சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்பு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள்.  அன்றைக்கு இரவு பத்து மணி ஆகிவிட்டதால் சிறுவனை அந்த பெண் மாஜிஸ்திரேட் வீட்டிற்கு கொண்டு சென்று ஆஜர் படுத்தி இருக்கிறார்கள் போலீசார்.

 வீட்டில் வழக்கு குறித்து பெண் நீதிபதி விசாரித்துக் கொண்டிருந்திருக்கிறார்.  அப்போது திடீரென்று தனது கையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண் நீதிபதியை நோக்கி குத்துவதற்கு பாய்ந்திருக்கிறான் சிறுவன்.   இதை கண்டு அந்த பெண் நீதிபதி பதறிப் போய் இருக்கிறார்.  சிறுவனின் தாயார் அலறி இருக்கிறார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட போலீசார் , அந்த சிறுவனை மடக்கி பிடித்து வெளியே இழுத்துச் சென்று இருக்கிறார்கள்.   சம்பவம் குறித்து அந்தப் பெண் நீதிபதி மாவட்ட நீதிபதியிடம் தகவல் தெரிவித்திருக்கிறார்.  அவர் அளித்த உத்தரவின்படி,  உடனே அந்த சிறுவனை போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

அண்மையில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட வாலிபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற போது , அங்கு பரிசோதனை செய்த பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்து அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து சரமாரி குத்தி கொலை செய்த  சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து இன்னும் கேரளா மீளவில்லை . அதற்குள்ளாக பெண் நீதிபதியை சிறுவன் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.