திண்டுக்கல்லை நடுங்கவிட்ட படுகொலை! பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி

 
திண்டுக்கல்லை நடுங்கவிட்ட படுகொலை

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற கொலை குற்றவாளி வீரபத்திரன் என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச் சென்ற கொலை குற்றவாளி வீரபத்திரன் என்பவர் பட்டப் பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் - மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. தப்பியோடிய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவ இடத்திலேயே வீரபத்திரன் பலியானார். மனைவி மாரியம்மாளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் விசாரணை. கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். திண்டுக்கல் ந‌த்தம் அருகே ஜாமினில் வந்தவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.