பேய் விரட்டுகிறேன் என்று சிறுவனை போட்டு அடித்த மந்திரவாதி! படுகாயமடைந்து உயிரிழப்பு

 
s

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சிறுவனை மந்திரவாதி இடம் அழைத்துச் செல்ல,  சிறுவனுக்கு பேய் பிடித்து விட்டது என்று சொல்லி சிறுவனை போட்டு மந்திரவாதி அடிக்க,  ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவன்  பலத்த அடியின் காரணமாக பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான்.   மகாராஷ்டிரா சிறுவனுகு கர்நாடக மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த கொடுமை .

மகாராஷ்டிரா மாநிலத்தில் சாங்கிலி மாவட்டத்தில் உள்ளது கவத்தே மகாங்கள் கிராமம்.  இக்கிராமத்தைச் சேர்ந்த ஆர்யன் லாண்டே என்கிற 14 வயது சிறுவனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கிறது.  அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் பெற்றோர் சிகிச்சை அளித்து வந்திருக்கிறார்கள்.   அப்படியும் நோய் குணமாகாமல் இருந்திருக்கிறது.

ச்ச்

 இதனால் அக்கம் பக்கத்தினர் சொன்னபடி கர்நாடக மாநிலத்தில் சிர்கூர் பகுதியில் உள்ள மந்திரவாதி அப்பாசகேப்பிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள் . அங்கு சென்றதும் சிறுவனுக்கு பேய் பிடித்திருக்கிறது என்று கூறி இருக்கிறார் .  அப்பா சாகிப் சிறுவனுக்கு பேய் விரட்டுகிறேன் என்று சொல்லிய மந்திரவாதி அப்பாஸ் சிறுவனை கடுமையாக அடித்து தாக்கி இருக்கிறார் . பலத்த காயம் அடைந்த  சிறுவனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

 இதனால் பதறிப்போன பெற்றோர் தங்கள் மகனை அங்கிருந்து சிர்கூரில் இருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மிராஜ் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள்.  அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுவன் ஆர்யன் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான்.

 தகவல் அறிந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மூடநம்பிக்கைகளை நம்பி இப்படியும் செய்யலாமா என்று பெற்றோரை கடுமையாக திட்டி விட்டு இது குறித்து மேற்கொண்டு அந்த மந்திரவாதி பற்றி விசாரணை நடத்தி வருகின்றார்கள்.