அடுப்பில் கொதித்த குழம்பை மனைவியின் மீது ஊற்றிய கணவர்!கள்ள உறவை கண்டித்ததால் ஆத்திரம்!

 
க்

 வேறொரு பெண்ணுடன் கணவருக்கு பழக்கம் இருந்ததை கண்டித்ததால் ஆத்திரமடைந்த கணவர் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பு எடுத்து மனைவியின் மீது ஊற்றி இருக்கிறார். 

 விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளது தடுத்தாட்கொண்டூர் கிராமம்.   இக்கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி. அவரின் மனைவி பெரிய நாயகி.   ஆரோக்கியசாமிக்கு தான் வசித்து வரும் அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு இருந்து வந்திருக்கிறது.  இது பெரிய நாயகிக்கு தெரிய வந்ததும் அந்தப் பெண்ணுடன் உறவை விட்டு விடும்படி கேட்டு இருக்கிறார். 

ஃப்

 ஆனால் ஆரோக்கியசாமி தொடர்ந்து அந்த பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார் . இதனால் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் அளித்திருக்கிறார் பெரிய நாயகி.   போலீசார் இருவரையும் சமாதானமாக போகும் படி அறிவுறுத்தி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் நேற்று மீண்டும் கணவர்,   கள்ள உறவில் இருந்த பெண் வீட்டிற்கு சென்று வந்திருக்கிறார்.  இதை தெரிந்து கொண்ட பெரியநாயகி,  இத்தனை சொல்லியும் அங்கே எப்படி போகலாம் என்று கேட்க,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது .

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஆரோக்கியசாமி,  அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த குழம்பை எடுத்து வந்து மனைவி மீது ஊற்றி இருக்கிறார்.  இதில் துடி துடித்து அலறி துடித்துக் சத்தம் போட்டு இருக்கிறார் பெரியநாயகி . அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்து உள்ளார்கள்.  அங்கு போலீசார் வந்து பெரிய நாயகி இடம் வாக்குமூலம் கேட்க,  அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.