மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவன் கைது! கும்பகோணத்தில் பரபரப்பு

 
ஆசிட் வீச்சு

கும்பகோணம் அருகே மனைவி பரமேஸ்வரி மீது கழிவறை சுத்தம் செய்யும் ஆசிட்டை ஊற்றிய கணவன் ராஜேஷ் கைது செய்யப்பட்டார்.

Covai: Police enquires the acid Attack on women | கோவையில் பயங்கரம்! பெண்  மீது ஆசிட் வீச்சு..!| Tamil Nadu News in Tamil


கும்பகோணம் அருகே திப்பிராஜபுரம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி (வயது 32). இவரது கணவர் ராஜேஷ். இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பரமேஸ்வரி குவைத் நாட்டில் வேலை செய்ய பயணம் மேற்கொண்டார். கடந்த 3ஆம் தேதி தாயகம் திரும்பிய பரமேஸ்வரி வெளிநாடு செல்ல நகைகளை அடமான வைத்து தனது சகோதரர் பணம் பெற்று தந்த நிலையில், அந்த நகைகளை வங்கியில் இருந்து மீட்பதற்காக இன்று தனது மகனுடன் திப்பிராஜபுரம் கடைவீதி வந்துள்ளார். கணவருடன் வந்தால் தான் நகைகளை உனது பெயருக்கு மாற்றி தருவேன் என பரமேஸ்வரியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.


இதனை தொடர்ந்து தனது கணவரை வங்கிக்கு வரச் சொல்லி உள்ளார் பரமேஸ்வரி. அப்போது கழிவறை சுத்தம் செய்யும் கெமிக்கலை பரமேஸ்வரி முகத்தில் வீசி உள்ளார் கணவர் ராஜேஸ். கடும் எரிச்சல் காரணமாக பரமேஸ்வரி கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு கண்ணில் ஆசிட் பட்டுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு பிறகு தான் கண்ணின் பார்வை தன்மை தெரியவரும் என கூறப்படுகிறது. அவரது கணவர் ராஜேஷை நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார் கைது செய்தனர்.