சமாதானம் பேசி அழைத்துச் சென்று சரமாரியாக மனைவியை குத்திக் கொன்ற கணவன்

 
k

 பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் பேசி அழைத்து வந்து தர்காவுக்கு பிரார்த்தனை செய்ய அழைத்துச் சென்று அங்கே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்திருக்கிறார் கணவர் . 

நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தை சேர்ந்தவர் இம்ரான் கான்.  இவரின் மனைவி கசினா பேகம் . இத்தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.  இம்ரான் கானுக்கும் கசினா பேகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள் . ஹசீனா பேகம் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டில் சென்று வசித்து வருகிறார் .

kk

இந்த நிலையில் தான் நேற்று மாலையில் மாமனார் வீட்டிற்குச் சென்ற இம்ரான் கான்,  தன் மனைவி ஹசீனா பேகத்தை சந்தித்து நடந்த தவறுகளை எல்லாம் நினைத்து தெரிந்து விட்டேன் என்று மனைவியிடம் உருக்கமாக பேசி சமாதானப்படுத்தி இருக்கிறார் .  பின்னர் அங்கே சாப்பிட்டு இருக்கிறார். 

அப்போது,  மனசுக்கு ரொம்ப பாரமாக இருக்கிறது. அதனால் இரண்டு பேரும் போய் தர்காவில் தொழுகை செய்து விட்டு வரலாம் என்று கூப்பிட்டு இருக்கிறார்.  இதை நம்பிய கசீனா பேகம் கணவருடன் செல்ல குளத்தங்கரை தர்காவுக்கு போயிருக்கிறார்கள்.  அங்கே பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். 

 சம்பவம் குறித்து அறிந்த பேட்டை போலீசார் கசினா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர் .நேற்றைய தினம் இரவே மனைவியை கொலை செய்த கத்தியுடன் நெல்லை டவுன் போலீசிடம் சரண் அடைந்திருக்கிறார் இம்ரான் கான்.