தோட்டத்துக்குள் ஓடஓட விரட்டி மனைவியை சரமாரியாக வெட்டி கொன்ற கணவர்

 
ka


தோட்டத்துக்குள் ஓட ஓட விரட்டி மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார் கணவர்.  கள்ள உறவை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டிருக்கிறார் கணவர் .  தென்காசி மாவட்டத்தில் அரங்கேறி இருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம் .

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் அடுத்த வடக்கு அழகு நாச்சியாபுரம்.  இப்பகுதியைச் சேர்ந்தவர் மகா கிருஷ்ணன்.   இவரின் மனைவி கனகா தேவி. இத்தம்பதிக்கு முத்துலட்சுமி ,கவின் என்று 14 வயது மற்றும் 7 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர் . கனகா தேவியும் மஹாகிருஷ்ணனும் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி ஆவார்.  

k

வேன் டிரைவரான மகா கிருஷ்ணனுக்கு தான் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆன ஒரு பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டிருக்கிறது. இவர்களின் கள்ள உறவு கனகா தேவிக்கு தெரிய வந்ததும், அவர் கணவனை கடுமையாக கண்டித்து இருக்கிறார்.   இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி இது தொடர்பாக வாக்குவாதம் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது . 

இந்த தகராறு முற்றியதை அடுத்து வீட்டில் இரண்டாகப் பிரித்துக் கொண்டு தனித்தனியாக வசித்து வந்திருக்கிறார்கள் .  இந்த நிலையில் தான் நேற்று மதியம் கனகா தேவிக்கும் மகா கிருஷ்ணனுக்கும் இடையே மீண்டும் இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட அப்போது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு மனைவியை வெட்ட ஓடி இருக்கிறார்.  இதில் சுதாரித்துக் கொண்ட கனகா தேவி வீட்டில் கதவை திறந்து கொண்டு வெளியே தோட்டத்துக்குள் ஓடி இருக்கிறார்.  ஆனால் ஓட ஓட அவரை துரத்தி சென்று அரிவாளால் வெட்டி கொலை செய்திருக்கிறார் .

சம்பவம் குறித்து அறிந்ததும் குருவிக்குளம் போலீசார் நேரில் வந்து கனகா தேவியின் உடலை மீட்டு சங்கரன் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.   இதன்பின்னர் படுகொலை குறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் கொலையாளி யார் என்பது குறித்த மர்மம் நீடித்திருக்கிறது.

 பின்னர் போலீசாருக்கு கனகா தேவியின் கணவர் மீது சந்தேகம் வந்திருக்கிறது .  அவரை பிடித்து விசாரணை நடத்திய போது தான் தனகு இருந்த கள்ளத்தொடர்பை மனைவி அடிக்கடி கண்டித்து வந்ததால் ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்தால்தான் கள்ளக்காதலனுடன் நிம்மதியாக வாழ முடியும் என்று நினைத்து அப்படி கொலை செய்ததாக கூறியிருக்கிறார் .  

தோட்டத்துக்குள் மனைவி தப்பி ஓட அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சர மரியாக வெட்டி கணவன் கொலை செய்துள்ள சம்பவம் சங்கரன்கோவில் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.