உடலை மின்விசிறியில் தலைகீழாக தொங்க விட்டு கூறு போட்ட பயங்கரம்! அதிரவைக்கும் பின்னணி

 
உடலை மின்விசிறியில் தலைகீழாக தொங்க விட்டு கூறு போட்ட பயங்கரம்! அதிரவைக்கும் பின்னணி

கூடுவாஞ்சேரியில் கர்ப்பிணியை கொன்று உடல் பாகங்களை ஆக்ராவிற்கு சூட்கேசில் அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


சென்னையில் ஹயாத் நிஷா என்ற பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுச் சூட்கேஸில் அடைக்கப்பட்டு இரயில் மூலம் டெல்லி நோக்கி அனுப்பப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் அஸ்ஸாம் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ராகுல் மற்றும் பகவதி மாஜி என்ற தம்பதியை காவல் துறையினர் அண்மையில் கைது செய்தனர். காவல் துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில், ஹயாத் நிஷாவைக் கொலை செய்த நபர்கள் அவரது உடலைச் சிதைத்துச் சூட்கேஸில் வைத்து இரயிலில் ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது தெரியவந்தது. 


இந்நிலையில் திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்ததால் கர்ப்பிணி ஹயாத் நிஷாவை தூங்கும்போது முகத்தில் மயக்க மருந்து தெளித்து கழுத்தறுத்து கொலை செய்த தம்பதி, ரத்தத்தை பிரியாணி அண்டாவில் வடியவைத்ததுடன், உடலை மின்விசிறியில் தலைகீழாக தொங்க விட்டு கூறு போட்டுள்ளனர். மேலும் நிஷாவிற்கு  மொட்டையடித்து, 2 கண்களை பிடுங்கி, உடல் பாகங்களை சூட்கேசில் அடைத்து கொடூரத்தை அரங்கேற்றியதாக கைதான ஒடிசா தம்பதி மாணிக் உதின் லஸ்கர், பகபதி மாஜி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.