குழந்தை கொடு என தொல்லை கொடுத்த காதலி! கழுத்தை அறுத்து கொன்ற காதலன்

எனக்கு ஒரு குழந்தை கொடு இல்லையென்றால் உன் குழந்தையை கொடு என்று தொந்தரவு செய்து வந்த காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கிறார் காதலன். கேரளாவில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.
கேரள மாநிலத்தில் உடுமாபாரா கிராமத்தை சேர்ந்தவர் தேவிகா. 34 வயதான இந்த இளம் பெண் அழகு கலை நிபுணராக இருந்தார். திருமணம் ஆகி இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பவிக்கான பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
சதீஷ்க்கும் திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கிறது. சதீஷுக்கும் தேவிகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இந்த பழக்கம் பின்னர் கள்ள உறவாக மாறி இருக்கிறது. இருவரும் காதலர்களாக மாறி இருக்கிறார்கள். 9 வருடங்களாக இப்படி காதலித்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் தான் சதீஷின் குழந்தையை தேவிகா பார்த்து இருக்கிறார். அந்த குழந்தையை பார்த்ததும் அதேபோன்று தனக்கு குழந்தை வேண்டும் என்று விரும்பி இருக்கிறார். சதீஷ் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பியிருக்கிறார். இதனால், காதலனிடம் குழந்தை கொடு என்று தொந்தரவு செய்து வந்திருக்கிறார். அப்படி இல்லை என்றால் உன்னுடைய குழந்தையை கொடு என்று கேட்டு வந்திருக்கிறார் . இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது .
குழந்தை வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் தேவிகா கேட்காமல் இருந்திருக்கிறார். இந்த நிலையில் தான் தனியார் விடுதியில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது உன் மூலமாக எனக்கு குழந்தை வேண்டும் குழந்தை கொடு என்று கேட்டு அடம்பிடித்து இருக்கிறார் தேவிகா . இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .
அப்போது சமாதானமாகாத தேவிகா மீது ஆத்திரம் அடைந்த சதீஷ் கத்தியை எடுத்து தேவிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். பின்னர் அதே கத்தியுடன் சென்று காவல் நிலையத்தில் நடந்த விபரத்தை சொல்லி சரணடைந்திருக்கிறார். சதீஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.