காப்பகத்தில் இருந்த சிறுமியை கடத்தி..3 பெண்களுக்கு இரட்டை ஆயுள்! ஆண்களுக்கு 7 ஆண்டு சிறை

 
si

காப்பகத்தில் இருந்த 14 வயது சிறுமியை  கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய மூன்று பெண்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது .  மேலும் ஒரு பெண்ணுக்கு 10 ஆண்டுகள் கடும் காவல் தண்டனையும்,  ஆண்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.   மூன்று பெண்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் விபச்சார தடுப்பு வழக்கிலிருந்து மீட்கப்பட்ட 14 வயது சிறுமியை சென்னை பெரவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்து விட்டனர் போலீசார்.   அந்த காப்பகத்தில் அப்போது விபச்சார வழக்கில் சிக்கி மீட்கப்பட்ட பாத்திமா மூஸா என்ற 28 வயது பெண்ணும் இருந்திருக்கிறார் .  

bb

காப்பதற்குள் சிறுமிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.   அந்த பழக்கத்தில் அந்த சிறுமிக்கு நல்ல இடத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை சொல்லி காப்பகத்தில் இருந்து சிறுமியை கடத்திச் சென்றிருக்கிறார் மூஸா.   தனது தாயார்,  நண்பர்கள் உதவியுடன் அந்த சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார்.  

 இதற்குள் காணாமல் போனதாக சிறுமி மற்றும் பெண் மூசா குறித்து காப்பக நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள்.   இது குறித்து  ஆள் கடத்தல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்திருக்கிறார்கள்.   போலீசாரின் விசாரணையில் பாத்திமா மூசா அந்த சிறுமியை கடத்தி சென்றதும் மூசாவின் தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்திருக்கிறது.

 அதை எடுத்து பாத்திமா மூசா, மாரியம்மாள், சத்தியா , தமிழ்ச்செல்வி, சதீஷ்குமார், செந்தில்குமார், மகேந்திரன் உள்ளிட்ட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர் .  இது குறித்த வழக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.   இந்த விசாரணை நடந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   மாரியம்மாள், சத்யா, தமிழ்ச்செல்வி ஆகிய மூன்று பெண்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் , பாத்திமா மூஸாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், செந்தில்குமார் ,மகேந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

 பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் நீதிபதி.