சாக்லேட் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை- கட்டிவைத்து அடித்த மக்கள்

 
சாக்லேட் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லை- கட்டிவைத்து அடித்த மக்கள்

ஆந்திராவில் ஏழாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை கட்டி வைத்து உதைத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rape

ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் அவுக்கு மண்டலம் காசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த தாசய்யா என்பவர் சாக்லேட் தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று  பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் தாசய்யாவை கட்டி வைத்து அடித்து  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவுக்கு போலீசார் தாசய்யாவை கைது செய்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.