கணவன் -மனைவியை சமாதானம் செய்த தோழி சரமாரி குத்திக்கொலை

 
kn

கணவன்- மனைவி சண்டைக்கு இடையே சென்று புகுந்து அவர்களை சமாதானப்படுத்த முயன்ற தோழி சரமாரியாக குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.  ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்திருக்கிறார்.

 மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்ரா பகுதியைச் சேர்ந்தவர் நாகேஷ்.   இவரின் மனைவி கிரண்.   கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

 மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென்று புயல் வீசியிருக்கிறது.  இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது. வாக்குவாதம் , தகராறு ஆகியவற்றினால் மன உளைச்சல் அடைந்து இருக்கிறார்கள் .  இதனால் கணவரை விட்டு பிரிந்து தனது தோழியுடன்  வீட்டில் சென்று வசித்து வந்திருக்கிறார் கிரண்.

s

தோழி ஜோதி வீட்டில் சென்று மனைவி வசித்து வருவதை அறிந்த நாகேஷ்,  அங்கு சென்று ஜோதியை சந்தித்து   மனைவியிடம் தனியாக பேசி சமாதானம் பேச வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் . இதை அடுத்து கிரண் தங்கி இருந்த அறைக்குள் சென்று மனைவியிடம் பேசி இருக்கிறார் நாகேஷ்.   அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.   இதில் ஆத்திரமடைந்த நாகேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியை குத்தி இருக்கிறார்.

 இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தோழி ஜோதி,   கிரணை காப்பாற்ற முயன்று இருக்கிறார். அப்போது நாகேஷ் சரமாரியாக ஜோதியை குத்தி இருக்கிறார் . இதில் கீழே விழுந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் ஜோதி.   தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த  ஜோதி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.   படுகாயம் அடைந்து கிடந்த கிரணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.   சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நாகேஷை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார்கள் போலீசார்.