தீக்குளித்த பெண் தலைமைக்காவலர் உயிரிழப்பு! கணவர் தலைமறைவு

 
fi


தீக்குளித்த பெண் தலைமை காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதனால் தலைமறைவாக இருக்கும் அவரது கணவரை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர் .  

விழுப்புரம் மாவட்டத்தில் விக்ரவாண்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை.   இவரின் கணவர் நடராஜன்.  கடந்த 2006 ஆம் ஆண்டில் தமிழக காவல்துறையில் பணிக்கு சேர்ந்தவர் மணிமேகலை விழுப்புரம் காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். 

 2014 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார் மணிமேகலை.  தம்பதிக்கு மிதுன் சாய் என்று ஏழு வயதில் ஒரு மகனும் , நிகேஷ் என்று ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

g

 2006 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரைக்கும் சென்னையில் வேலை பார்த்து வந்த மணிமேகலை,  விழுப்புரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். இதனால் 2018 ஆம் ஆண்டு முதல் கணவன் மனைவியிடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது . இதனால் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.  குழந்தைகள் இருவரும் நடராஜர் உடன் விழுப்புரத்தில் வசித்து வந்திருக்கிறார்கள்.

 இந்த நிலையில் கடந்த பத்தாம் தேதி அன்று குழந்தைகளை பார்க்க விழுப்புரம் சென்றிருக்கிறார் மணிமேகலை.  அப்போது குழந்தைகளை பார்க்க விடாமல் தடுத்து இருக்கிறார் நடராஜன்.  இதில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது . 

இந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு ஆளான மணிமேகலை மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் பெண்ணை அவ மணிமேகலை நீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர் அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மார்ச் 10ஆம் தேதி சென்னை கே எம் சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பு சிகிச்சை பெற்று வந்த மணிமேகலை நேற்று இரவு சிகிச்சை பலன் என்று கூறினார். இதை எடுத்து மணிமேகலையின் கணவர் நடராஜன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.  இதை தெரிந்ததும்  நடராஜன் தலைமறைவாகி இருக்கிறார் அவரை பிடிக்க போலீசார் தேதி வருகின்றனர்.